பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/425

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்பாக்கள் 4113 அந்த ஒலியில் உள்ள அன்பையும் குழைவையும் உணர்ச்சி’ யையும் முருகன் அறிவான், அவன் அந்த இதயத்தில் கோயில் கொண்டிருக்கிருன் அல்லவா? திருகாமத்தை அன்பர் கூறும்போது அது பெரு முழக்கமாக இருக்கும் என்பது அன்று. அந்தக் குரலி' அாடே பக்தி இழையும், ஆர்வம் ததும்பும், இன்ப அநுபவம் ஒலிக்கும். அதை முருகன் உணர்ந்து கொள்வான். இதயம் முழுவதும் மலர்ந்து அன்புத்தேன் பொங்க அதன் தாரையே காமமாக வரும். ஒரு முறை வந்தாலே முருகன் முன்னே வந்து கின்று விடுவான், 'முருகா எனஓர் தரம்ஒ தடியார் முடிமேல் இணைதாள் அருள்வோனே!” என்பது திருப்புகழ், சிரம்பியிருக்கும் ஏரியில் ஒரு கீற்றுக் கிறிஞல் போதும்; வெள்ளம் பாயத் தொடங்கிவிடும். அதுபோல ஒருமுறை திருநாமத்தைச் சொல்லும்போதே உள்ளே பொங்கும் அன்பு வெள்ளம் பாய்ந்து வரும். இவ்வாறு திருநாமத்தைத் தேனுாற கின்று உச்சரிக்கும் அன்பர்களுக்கு முருகன் எப்படி எப்படி கலம் செய்கிருன? இதைப் பக்தர் ஒரு பாட்டில் சொல்கிருர், அத்தகைய அடியவர்களுக்கு ஏதேனும் அச்சம். உண்டானல் முருகன் அவர்கள் ஆறுதல் பெறும்படி தன் அடைய ஆறு முகங்களைக் காட்டி:அருளுவான். முருகன் அடியார்கள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள். கோழைகளே சிறியதற்கெல்லாம் அஞ்சுவார்கள். இறைவன் அருள் தினே உண்டு என்ற உறுதியோடு இருப்பவர்கள் எளிதில் அஞ்சுவதில்லை. அவர்கள் அஞ்சும்படி வருவது ஏதும் இக்சி