பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/426

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<412 திருமுருகாற்றுப்பட்ை விளக்கம் உலகில் இல்லை. அவர்கள் வறுமைக்கு அஞ்ச மாட்டார்கள்; நோய்க்கு அஞ்ச மாட்டார்கள். ஒரு கால் அவர்களும் அஞ்சும்படி ஏதேனும் வருமானல் அப்போது முருகன் அவர்கள் அஞ்சும் முகங்களுக்கு எதிரே ஆறு முகங்களுடன் தோன்றி இன்னலைப் போக்கி நலம் செய்வான். பக்தர்களும் அஞ்சும் துன்பம் ஒன்று உண்டு. அதுதான் மரணம். மிகப் பெரியவர்களெல்லாம் அதற்கு அஞ்சு வார்கள். மனிதனுக்கு உண்டாகும் அச்சங்களில் வேறு யாராலும் மாற்ற முடியாத அச்சம் இறப்பில்ை உண்டாகும் அச்சம். எந்த உயிரும் அதற்கு அஞ்சும். அவ்வாறு தன் அடியார்கள் மரண நேரத்தில் அஞ்சு முகம் காட்டினல் முருகன் எழுந்தருளி வந்து தன் ஆறுமுகத்தைக் காட்டி மரண பயத்தைப் போக்கியருளுவான் : 'என நாடிவந்த, கோள்ளன் செயும் கொடுங் கூற்றென் செயும்' என்ற தைரியம் உண்டாகும்படி செய்வான். வறுமை, பிணி, பகை முதலியவற்ருல் வரும் அச்சங் களேப் போக்கச் செல்வரும் மருத்துவரும் வீரரும் இருக் கிருர்கள். ஆனல் காலனல் வரும் அச்சத்தைப் போக்க இறைவன் ஒருவல்ைதான் முடியும். 'மாற்றரும் கூற்றம்" என்று தொல்காப்பியம் சொல்லுகிறது. அந்தக் கொடிய பயத்தை, முருகா என்று ஒதும் அடியவர்களுக்குப் போக்கும் கருணைக் கடல் முருகன். அஞ்சு முகம்தோன்றின் ஆறு முகம்தோன்றும். முருகாஎன்று ஓதுவார் முன், ஆறுமுகம் என்ற தொடரே, கண்டவர்கள் அச்சம் கிங்கி ஆறுதல் பெறுவதற்குக் காரணமான முகம் என்ற