பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/427

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்பாக்கள் 41.3% பொருளையும் உடையதாக இருக்கிறது. தாயுமானவரும் அஞ்சு முகத்தையும் ஆறுமுகத்தையும் சினேக்கிரு.ர். அஞ்சுமுகம் காட்டாமல் ஆறுமுகம் காட்டவந்த - செஞ்சரணச் சேவடியைச்சிந்தைவைப்ப தெந்நாளோ?' முருகா என்று ஒதுபவர்கள் வாழ்க்கையில் இடர்ப் பாடுகள் உண்டாகலாம்; மனத்தில் போராட்டம் எழலாம்; உலகத்தில் வளைய வருவதல்ை அதன் வாசனை வந்து சூழ்ந்து கொண்டு துன்புறுத்தலாம்;. நல்ல எண்ணங்களும் தீய எண்ணங்களும் போராடிக் கொண்டு. வாழ்க்கையை அலேக்கழிக்கலாம், மனிதர்களுடைய மனமே ஒரு போர்க்களங்தான். தீய எண்ணங்களாகிய ஆசுர சம்பத்துக்களும், நல்ல. எண்ணங்களாகிய தேவ சம்பத்துக்களும் இடைவிடாமல், போராடிக் கொண்டே இருக்கின்றன. தீய எண்ணங்களே. அடக்கி வென்று நிற்பவன் நற்செயல்களேச் செய்கிருன், அல்லாதவன் தி நெறியில் செல்கிருன். மனத்தில் நிகழும் இந்தப் போராட்டத்தில் நல்லது வெற்றி பெற வேண்டு: மால்ை வலிய துணை ஒன்று வேண்டும். துணை வலியி: ல்ை போரில் வெல்வது அரசர்களுக்கு வழக்கம். மனிதனும் மனத்தில் கடக்கும் போராட்டத்தில் வெற்றி பெறப் பெருந்துணை ஒன்றை நாட வேண்டும். அப்போதுதான் அமைதி உண்டாகும். முருகா என்று ஒதும் அடியார்களுக்கு இத்தகைய போராட்டம் நேராது: நேர்ந்தால் முருகன் வடிவேல் தோன்றிப் போராட்டத்தைப் போக்கும். தேவாசுரர் களிடையே போர் நிகழ்ந்தபோது முருகன் வேலே ஏவி. வெற்றி பெற்ருன். அது சென்ற இடமெல்லாம் வெற்றியே நிலவும். வேல் ஞான சக்தியாதலின் அறியாமையால் நிகழும் போராட்டங்களில் ஒளியைப் புகுத்தி வெற்றிச்