பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2414 திருமுருகாற்றுப்படை விளக்கம் உண்டாகும்படி அது துணே விற்கும். பழைய வெம்மை யான சமரில் எப்படி வேல் தோன்றி வெற்றியைப் பெறச் செய்ததோ, அப்படியே மனத்தில் நிகழும் வெவ்விய போராட்டங்களிலும் அது தோன்றி அச்சத்தைப்போக்கும். வெஞ்சமரில் அஞ்சல்என வேல்தோன்றும். மற்றவர்களெல்லாம் முருகா என்று சொல்லும் போது அது கா அளவில் கிற்கும். பக்தர்களோ கெஞ்சிலே முருகனே கிறுவி அவன் காமத்தைச் சொல்கிருர்கள். அவர்கள் பலகாலும் முறையிடும்படி பார்த்துக் கொண்டி ருக்க மாட்டான் முருகன். ஒரு முறை கினேத்தாலே தன் இரண்டு திருவடிகளையும் காட்டி இன்னலைப் போக்க முற் படுவான். - - - வைணவர்களில் ஒரு சாரார் திருமாலே ஒரு முறைக்கு மேல் வணங்குவதில்லே. ஒரு நமஸ்காரம் செய்த அளவிலே பெருமாள் கடளிையாகி விடுகிருராம். உடனே பக்த ருடைய செயல்களே சிறைவேற்றப் புகுகிருராம் அதற்கு மேல் வணங்கினல் திருமால் தலையில் பெரும்பாரத்தை ஏற்றிய அபசாரம் உண்டாகி விடுமாம். இறைவனுடைய எளிமையையும் பெருங்கருணேடையும் கினேப்பூட்டுகிறது. இந்த வழக்கம். அவ்வாறே தன்னே இடைவிடாது தொடர்ந்து திரு காமத்தைக் கூறி அன்பு செய்யும் அடியவர்களுக்குக் குறிப் பறிந்து அருள் புரிய ஒடி வருவான் முருகன். அவர்கள் ஒரு முறை கினைத்துவிட்டால் உடனே வந்து தன் இரண்டு திரு வடித் தாமரைகளையும் காட்டுவான். அவன் காட்டுவான் என்று சொல்லாமல் அவைகளே வந்து தோன்றும் என்று சொல்கிருர் அன்பர். பழகிய வழியில் நாம் கினைக்காமலே கம் கால் போவது போல அவை செல்லுமாம்.