பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவி பிறந்த கவிதை 29 × 'சொற்பொருள் அறியாப் பார்ப்பான்' என்று அந்தக் கோபத்தை கன்கு தெரிவிக்கிருர். உண்மையில் நக்கீரர் பாட்டைக் கண்டு கோபம் கொண்டவன் ரானல், "அந்த முட்டாள் புலவனே அழைத்து வா' என்று: சொல்லியிருக்க வேண்டும். கோபத்திற்குரிய சொற்கள் எல்லாம் தருமியைச் சார்ந்து வருகின்றன, பாட்டைப் பற்றியும் புலவனைப்பற்றியும் சொல்லும்போது, ‘'நீ இதைச் சொல்வித் தந்த நற்கவிப் புலவன் தன்னைக் கொண்டுவா நாடி’ என்கிருர், "இந்த நல்ல கவியைப் பாடிய புலவனே அழைத்து வா' என்பது பொருள். அவர் தம் உள்ளத்துள் அதை நல்ல கவி என்று உணர்ந்தார், ஆலுைம் வெளிப் படையாக அதை ஒப்புக்கொள்வதற்கு அவருடைய அகந்தை இடம் கொடுக்கவில்லை. அதனல் பிழை இருக்கிறது. என்று சொன்னர். தருமி இதனே எதிர்பார்க்கவில்லை, பாண்டியனே உத்தரவிட்டபோது வேறு யார் தடுக்க முடியும் என்று: எண்ணினன். ஆனல் புலவர் பெருமான் நக்கீரர் தடுத்ததை. அறிந்து அவன் பயந்துபோனன். புலவர்களுக்கு அரசனே விட மிக்க பெருமை உண்டு என்பது அந்தக் காலத்து மக்களுக்கு நன்கு தெரியும். ஆகையால் பாண்டியன் சொன்னலும் புலவர் தடுத்தமையில்ை தருமி வருத்தமுற்று உடனே கோயிலுக்கு ஓடினன். ஆண்டவனே வணங்கி, 'எம்பெருமானே! உன்னுடைய பாட்டுக்குப் பிழை சொல்லி விட்டான் ஒரு புலவன். என்னுடைய திருமணம் கடக் தாலும் கடக்காவிட்டாலும் உன் மானத்தை கோப்பாற்றிக் கொள்ள வேண்டும்' என்று புலம்பின்ை. ஆண்டவன்