பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்பாக்கள் 417 மரத்தைத் தூக்கலாம். அப்போது எல்லோரும் அந்த ஊசியைத் தாக்கினவர்கள் ஆவார்கள். பலர் தூக்குவதற் குரிய கனம் இல்லாமல் இருக்கும் ஊசி நீளமும் கனமும் உள்ள தென்ன மரத்தில் சேர்ந்து பலரும் தூக்கும் கிலேயில் இருக்கிறது. அதுபோல் குணம், குறி, வாழ்க்கை நிகழ்ச்சிகள் படைத்த மனிதனுக்கு இறைவனைப் பற்றிப் பேசுவதற்கும் பல நேரம் சிந்திப்பதற்கும் உரியன வாகப் பல கதைகள் வேண்டியிருக்கின்றன. பல சிகழ்ச் சிகள் அவசியம் வேண்டுமென்று தோன்றுகிறது. ஆகவே புராணங்களும் இதிகாசங்களும் கூறும் இறைவனைப் பற்றிய கதைகள் எல்லாம் அவனைப் பற்றிச் சிந்திப்பதற்கும், அவனுக்குள்ள குணங்களே எண்ணி எண்ணி இன்புறுவ தற்கும், அறத்தின் வழியே வாழ்ந்து மறத்தைப் போக்கு வதற்கும் பயன்படுவன. முருகன் பல உறவினர்களே உடையவன் என்பதை இந்தப் பக்தர் கினேவுக்குக் கொண்டு வருகிருர். அவன் திருச்செந்தூரில் எழுந்தருளியிருக்கும் முருகன். திருச்செங் துாருக்குச் செந்தி என்பது ஒரு பெயர். முருகனே! செக்தி முதல்வனே! முருகனுக்கு மாமன் மாயோளுகிய திருமால். அருணகிரிகாதப் பெருமான் முருகனேக் குறிப்பிடும் பல விடங்களில் இன்னுருடைய மருகன் என்பதை மிகச் சிறப் பாகக் கூறுவார். முருகன் பரமேசுவரனுக்கு மகனக விளங்கு கிருன் , - மாயோன் மருகனே! ஈசன் மகனே! அவனுக்கு ஒர் அண்ணனும் இருக்கிருன். முகத்தி விருந்து தொங்கும் துதிககையைப் பெற்றவன் அவன்; யானே முகன். ஒருகைமுகன் தம்பியே! திரு-27