பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/432

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 திருமுருகாற்றுப்படை விளக்கம் குடும்பத்தோடு வாழும் மக்களின் கிலேகளே எல்லாம் தெரிந்து அவர்களுக்கு வாழ வழிவகுத்து முன்னேறச் செய்கிருன் இறைவன். குடும்பத்தில் உழல்கின்றவர் களுக்குத் தங்கள் குடும்பத்தைப் பற்றிய சுகதுக்கங்கள் நன்கு தெரியும். இறைவனும் அவற்றை நன்கு தெரிந்த வனைப்போல விளங்குகிருன், பலருக்கும் உறவினகை இருக்கும் முருகப் பெருமான், யார் தன்ன நம்புகிருர்களோ அவர்களுக்கு கலம் செய் வான். இறைவனிடத்தில் ஈடுபாடு என்பது, அவனுடைய திருவருள் கிச்சயமாகக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையின் அடித்தளத்தில் எழுவது. இந்த கம்பிக்கை இல்லா விட்டால் எத்தனேதான் வழிபாடு கடத்திலுைம் பயன் இராது. 'மந்திரமும் தேவும் மருந்தும் குருவருளும் தந்திரமும் ஞானத் தவத்துறையும்-யந்திரமும் மெய்யென்ருல் மெய்யாக மேதினியி லேவிளங்கிப் பொய்யென்ருல் பொய்யாகிப் போம்: - என்பது ஒரு பழம் பாட்டு. பக்திக்கு நம்பிக்கையே அடிப்படையாக இருக்கவேண்டும். மதத்திற்கு நம்பிக்கை என்ற பொருளை உடைய 'ஃபெயித் (Faith) என்ற சொல்லை மேல்காட்டார் வழங்குகிருர்கள். அறிவினல் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முடியாது. சிலவற்றை நம்பித்தான் ஆகவேண்டும். ஒரு மூட்டை அரிசி முழுவதையும் உண்போம் என்ற நம்பிக்கை யில்தான் ஒருவன் வாங்கிக்கொண்டு வருகிருன். நெடுந்துாரம் ாடப்பவன் பூமி பிளந்து நாம் கீழே போவோம் என்று எண்ணமாட்டான். நம்பிக்கையின்மேல்தான் எம்முடைய முயற்சிகள் எல்லாம் கிற்க வேண்டும். உலக வாழ்வில்