பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/435

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்பாக்கள் 421 அதன் தாய் எப்போதும் கவனித்துக் கொள்கிருள். தானே கடந்து தானே உண்ணும் அளவுக்கு வளர்ந்த குழந்தை களைப் பற்றித் தாய் மிகுதியாகக் கவலைப்படுவதில்லை" நாம் இறைவனேயே நம்பும் இளங் குழந்தையாக ஆகிவிட வேண்டும். நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானே இதற்கு நாயகமே” என்று இருக்க வேண்டும். அப்போது இம்முடைய பொறுப்பு முழுவதும் அவனேச் சாரும். நமக்கு அவ்வளவு திடமான நம்பிக்கை இருப்பதில்லை. அதனல் மனம் தடுமாறுகிருேம், - - **. முருகனிடத்தில் உறுதியான பற்று வைத்து, காம் அவனேயன்றி வேறு யாரையும் சரணமடையவில்லை யாதலின் அவன் நம்மைப் பாதுகாப்பான் என்ற கம்பிக்கையை உடையவர் இந்த அடியவர். " உன்னை ஒழிய ஒருவரையும் கம்புகிலேன்; பின்ன ஒருவரையான் பின்செல்லேன்' என்று புகுந்தவர் அல்லவா? ஆதலின் முருகனுக்கு கம்மைக் காக்கும் கடப்பாடு உண்டு என்று உரிமை கொண்டாடுகிருர், நன்கடம்பனைப் பெற்றவள் பங்கினன் தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான் தன்க டன் அடி யேனையும் தாங்குதல் என்க. டன்பணி செய்து கிடப்பதே' என்று திருகாவுக்கரசர் கூறுகிருர். என்னைப் பாதுகாத்தல் அவனுடைய கடமை என்ற நம்பிக்கையை உடையவர் அவர் .