பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 - திருமுருகாற்றுப்படை விளக்கம் "என் தாய் எனக்கு எல்லாம் தருவாள்' என்று குழந்தை, யும், "என் நாயகர் எனக்கு வேண்டியவற்றையெல்லாம் தருவார்' என்று மனைவியும் கம்பி வாழ்வதுபோல, "இறைவன் எனக்கு வேண்டியன தந்து காப்பாற்று. வான்' என்று இருத்தல் பக்தர்க்கு இயல்பு. ஆகவே, இந்த அடியாரும் முருகனே நோக்கியே இதைக் கூறுகிரு.ர். கடமைப்பட்டவர் தம் கடமையைச் செய்யாது ஒழிந்தால், அதை வேறு யாரும் செய்ய முற்பட மாட்டார்கள், அவரவர்களுக்கு வெவ்வேறு கடமைகள் உள்ளன. இறைவனுக்கோ அடி யார்களுக்காகவே செய்யும் வேலைகளேயன்றி வேறு ஏதும் இல்லை. நாம் நம்முடைய பொறுப்பை உணர்ந்து ஒழுகாவிட்டாலும், அவன் தன் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதில்லை. இறைவன் இன்னும் போதிய அளவுக்கு நமக்கு அருள் செய்யவில்லையே என்ற ஏக்கம் பக்தர்களுக்கு. இருக்கும். பொருள் படைத்த பேர் எப்படித் தம்மிடம் உள்ள பொருளைக் கொண்டு திருப்தி அடையாமல் மேலும் மேலும் பொருள் பெற ஏங்குவார்களோ, அப்படியே: அருள் படைத்தவர்களும் ஏங்குவார்கள். - - ' செழுக்கமலத் திரளனநின் சேவடிசேர்ந் தமைந்த பழுத்தமனத் தடியருடன் போயினர்யான் பாவியேன் புழுக்கனுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி - - ஞானமிலா அழுக்குமணத் தடியேன் உடையாய்நின் அடைக்கலமே' என்று ஏங்குவார் மணிவாசகர், - இந்த ஏக்கமே பக்திக்கு அறிகுறி. முருகனுடைய திருவருள் முற்றக் கிடைக்கவில் லேயே என்ற ஏக்கத்தில் முறையிட வருகிருர் அடியவர்.