பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்பாக்கள் 423 காக்கக் கடவியரீ காவா திருந்தக்கால் ஆர்க்குப் பரமாம் அறுமுகவா? என்கிருர். 'என்னேப்பற்றிய கவலே எனக்கு இல்லாமல் நீயல்லவா எனக்காகக் கவலேப்படுகிறவன்? அத்தகைய வன் இப்போது புறக்கணிக்கலாமா?' என்று கேட்கிரு.ர். அவனுக்குத் தம்மைக் காக்கும் கடப்பாடு உண்டு என்று உரிமையோடு பேசுகிருர், முருகனே அறுமுகவா என்கிருர். முருகன் எங்கும் திருமுகமாய் எங்கும் திருக் கண்களாய் கின்று எல்லா வற்றையும் உணர்பவன். "எங்கும் கண்ணுகக் காண்கின்ற கதியே” என்பார் இராமலிங்க சுவாமிகள். முருகன் எல்லாத் திசை களிலும் முகமுடையான். அவன் பார்வைக்குத் தப்பும் பொருள் ஏதும் இல்லை. நான் முறையிடாமலே என் இடர்ப்பாடுகளே அறிந்துகொள்ளும் ஆற்றல் உடையவன் .ே எல்லாத் திசைகளிலும் திருமுகங்களும் கண்பார்வையும் படைத்த உனக்கு என் துயர் கண்ணிற் படவில்லை என்று சொல்வது முறையல்லவே' என்ற குறிப்போடு அவனுடைய ஆறு முகங்களைக் சுட்டிக் கூறினர். - முருகன் திருமார்பில் கடப்ப மாலையை அணிந்திருக் கிருன். போகத்துக்குரிய மால் அது. போர்க்குரிய கண்ணி வேறு; போகத் துக்குரிய மாலை வேறு. முருக அடைய கண்ணி காந்தள். அமைதியாக வள்ளி நாயகி யோடும் தேவ யானையோடும் எழுந்தருளியிருக்கும்போது கடப்பமாலையை அணிந்துகொண்டு விளங்குவான். இறை வனுக்குப் போகமும் யோகமும் அவசியமல்லவாயினும்