பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/438

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 - - திருமுருகாற்றுப்படை விளக்கம் உலகத்தார் மனேவி மக்களுடன் வாழ்ந்து இன்ப வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக அவன் போகியைப் போல் விளங்குகிருன். அவன் அப்படி இல்லாதொழிந்தால் உலகம் இன்பவாழ்வு இன்றி வீணுகிவிடும். 't போகியாக விளங்கி அதற்குரிய அங்கங்களே அணிந்து கொண்டு எழுந்தருளியிருக்கிருய் யாவரையும் வாழ்வில் இன்பம் காணும்படி போதுகாப்பேன் என்பதற்கு அறிகுறியாக அவ்வாறு இருக்கிருய், அப்படி உள்ள ே என்னைக் காப்பாற்ருமல் இருக்கலாமா? என்ற கருத்தை உள்ளடக்கி அவன் தாரைக் குறிக்கிருர், பூக்கும் கடம்பா! - (பூத்திருக்கும் கடம்ப மலர் மாலையை அணிந்தவனே.) இதற்கு வேறு ஒரு வகையாகவும் பொருள் கொள்ள லாம். முருகன் கடம்ப மரத்தில் எழுந்தருளியிருப்பவன். 'புதுப்பூங் கடம்பினும்' அவன் உறைகிருன் என்று திரு முருகாற்றுப்படை கூறுகின்றது. -- எனவே, 'மலர்ந்த கடம்ப மரத்தில் எழுந்தருளியிருப்ப வனே என்றும் இங்கே பொருள் கொள்ளலாம். அவனே. அறுமுகவா என்றும் பூக்கும்கடம்பா என்றும் விளித்தவர், அவனுடைய இயல்பான திரு.காமத்தையும் கூறுகிருர், "முருகா' என்றும் அடுத்து, "கதிர்வேலா!' என்றும் கூறுகிருர். முருகன் ஞானசக்தியைக் கையில் எந்தி யிருக்கிறவன். தன்னே அண்டினருடைய துயரத்தைப் போக்கும் அற்புதக் கருவி அது. " சூர்மார்பும் குன்றும், துளைத்தவேல் உண்டே துணை