பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்பாக்கள் - 425 என்று புகுந்தவர் இந்த அடியார். முருகன் என்னும் அரும் பெறல் மரபிற் பெரும் பெயரும் கதிர்வேலாகிய தனிப்படையும் உடையவன் கந்தவேள். வேலே விளங்கு கையான். வேலுக்கும் அவனுக்கும் உள்ள உரிமையை அவனுடைய மூலத் திருவுருவத்தில் வேலேயும் இணைத்து அமைக்கும் வழக்கத்திலிருந்து உணரலாம். திருச்செங்கோடு முதலிய தலங்களில் வேலேந்திய முருகனைத் தரிசிக்கலாம். காக்கக் கடவியரீ காவா திருந்தக்கால் ஆர்க்குப் பரமாம் அறுமுகவா?--பூக்கும் கடம்பா! முருகா! கதிர்வேலா! (பரம்- பாரம்; பொறுப்பு.) அடுத்தபடி முருகனுடைய இரக்கத்துக்குப் பாத்திரம் தாம் என்பதைச் சொல்கிருர். தம்மைத் தாமே உயர்த்திக் கொள்ளும் செருக்கு ஆகாதோ இது என்று தோன்றும். முருகனுடைய இரக்கத் துக்கு ஏற்ற இடம் இது என்று தம்மைச் சுட்டிச் சொல் கிருர், "கொடிய பசியுடையவன் நான்; சோறு போடு வதற்கு ஏற்ற பாத்திரம் கான்' என்று பசியுடையவன் சொல்வது போலவும், நோயால் வருந்துகிறவன் கான்; என்னே நீங்கள் கவனித்து மருந்து கொடுக்கவேண்டும்: உங்கள் மருத்துவத்துக்காக நிற்பவன் கான்; உங்கள் உப காரத்தை எதிர் கோக்கி இருப்பவன்' என்று பிணியுடை யவன் சொல்வது போலவும் சிற்பது இது. ‘இரங்காய்இனி என்பதல்ை, உன்னுடைய இரக்கத் துக்கு உரியவன் யான்' என்பதைக் கூறியவரானர். துன்பம் உடையவரிடமும் குறையுடையவரிடமும் இரங்குபவன் முருகன். ஆகவே தம்முடைய குறையைக் குறிப்பிட்டு.