பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 30 திருமுருகாற்றுப்படை விளக்கம் சொன்ன பாட்டுக்கு மனிதன் குறை கூறுவதாவது?" என்ற கோபம் அவனுக்கு. - இறைவன் இந்த விகழ்ச்சியெல்லாம் தெரியாமலா இருந்திருப்பான்? உடனே நக்கீரரோடு வாதிடலாம் என்று புறப்பட்டான். ஒரு புலவனைப்போலக் கோலம் கொண்டு, உடன் கற்றுச் சொல்லிகள் வர, மிடுக்குடைய கடையோடு சிவபெருமான் புறப்பட்டான், சங்க மண்டபத்திற்கு எதிரே வந்து, 'என் பாட்டுக்கு யார் தவறு சொன்னர்கள்?" என்று கேட்டான். நக்கீரர், "நான்தான்' என்று சொன்னர். "இதிலே என்ன பிழை இருக்கிறது? சொல்லில் .பிழையா? பொருளில் பிழையா?' என்று கேட்டான் சிவபெருமான். வந்தவன் சிவபெருமான் என்பது யாருக்கும் தெரியாது. நக்கீரர், "சொற்பிழை யாதும் இல்லை. பொருளிலே தான் பிழை இருக்கிறது' என்று துணிந்து சொன்னர். "என்ன பிழை?" "மகளிர் கூந்தலுக்கு இயற்கையாக மணம் உண் டென்பது பிழை" என்ருர் நக்கீரர். எத்தனையோ நூல்களில் இந்தச் செய்தி பலகாலமாக அடிப்பட்டு வழங்கி வருவதுதான். ஆனால் அகந்தை காரணமாக அந்த உண்மையை மறந்து நக்கீரர் மறுத்தார். - - "நூல்கள் நன்மங்கையர்கள் கூந்தலுக்கு மணம் இயல்பாக உண்டென்று சொல்கின்றனவே; அது பொய்யா?"