பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/441

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்பாக்கள் 427? கூறவில்லை. கான் பாவியினும் பெரும்பாவி என்று, சொல்வது எப்படியோ அப்படி அமைந்தது இது, காக்கக் கடவியகோவா திருந்தக்கால் ஆர்க்குப் பரமாம்? அறுமுகவா! - பூக்கும் கடம்பா முருகா! கதிர்வேலா! கல்ல இடங்காண் இரங்காய் இனி. 9 முறை திருமுருகாற்றுப்படையைப் பாராயணம் செய்பவர்கள் அந்நூல் முடிந்தவுடன் இதுகாறும் சொல்லி வந்த வெண்பாக்களேக் கூறித் துதி செய்வார்கள். அப்படி. அமைந்த வெண்பாக்கள் எட்டுக்குப் பின்னல் இரண்டு. வெண்பாக்கள் திருமுருகாற்றுப்படையைப் பாராயணம் செய்யும் முறையையும் அதல்ை உண்டாகும் பயனேயும் கூறுகின்றன. அவற்றை இனிப் பார்க்கலாம். - திருமுருகாற்றுப்படையைத் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த குகையில் இருந்து நக்கீரர் பாடினர் என்பது ஒரு வரலாறு. ஆதலால் ஒன்பதாவது வெண். பாவில் திருப்பரங்குன்றத்தை விணக்கிருர், இதைப் பாடிய அன்பர். திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளி யிருக்கும் பன்னிருகைப் பெருமானுடைய பாதத்தைஅணுகி அன்பர்கள் கரம் குவிப்பார்கள். அவனுடைய சங்கிதானத்தை அடையும்போதே அவன் பாதத்தை லட்சியமாகக் கொண்டு தரிசித்துக் கரத்தைக் குவித்துக் கொண்டே செல்வார்கள். பின்பு கண்ணுர அவன் திருமேனியழகைக் கண்டு இன்புறுவார்கள், அதுபோல. 'ஏ, நெஞ்சமே, நீயும் செய்வாயாக' என்று நெஞ்சுக்கு. அறிவுறுத்துகிருர் அன்பர். -