பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/442

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 திருமுருகாற்றுப்படை விளக்கம் கை கூப்பிக் கண்குளிரக் கண்டபிறகு, மிக்க ஆர்வத் துடன் திருமுருகாற்றுப்படையைச் சொல்ல வேண்டுமாம், தமிழ் நயம் கெழுமிய அழகான பாடல் அது. நீர் கொண்டு அபிடேகம் செய்து பூக்கொண்டு அருச்சித்துப் பழம் முதலியன கொண்டு வேதித்துப் பல வகை உபசாரங் களுடன் பூசை செய்வதற்கு எல்லாராலும் இயலாது. அவ்வாறு செய்ய முடியாவிட்டாலும் முருகனிடத்தில் பேரன்புடன் திருமுருகாற்றுப்படையை ஒ தி ைல் போதுமாம். முருகன் சங்கிதானத்தில் இந்த நூலைப் பாராயணம் செய்வது பூசை செய்வதற்குச் சமானமாகும், சிவபெருமான் சுந்தரமூர்த்தி காயைைரப் பார்த்து, 'அருச்சனே பாட்டே யாகும், ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக" என்று சொன்னதாகப் பெரிய புராணம் கூறுகின்றது. அங்கே தமிழ்ப்பாட்டைப் பாடுதல் அருச்சனையோடு ஒத்தது என்ற கருத்தைக் காண்கிருேம், அதுபோலவே இங்கும் திருமுருகாற்றுப் படையைப் பாராயணம் செய்வதுவே பூசைக்குச் சமான மானது என்று அன்பர் கூறுகிருர், பரங்குன்றில் பன்னிருகைக் கோமான்தன் பாதம் கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு-சுருங்காமல் ஆசையால், நெஞ்சே, அனிமுருகாற் றுப்படையைப் பூசையாக் கொண்டே புகல். (என் கெஞ்சே, திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளி யிருக்கும் பன்னிரண்டு திருக்கரங்களே உடைய தலைவனகிய முருகப்பெருமானுடைய திருவடியைக் கைகளைக் குவித்து வணங்கிக் கண்கள் குளிரும்படியாகத் தரிசித்துச் சிறிதும் குறைவுபடாமல் மிக்க ஆர்வத்துடன் அழகிய திருமுரு காற்றுப்படையைப் பூசை செய்வதாக எண்ணிக்கொண்டு பாராயணம் செய்வாயாக, .