பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/445

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்பாக்கள் 431 தருளி வந்து அவனுடைய மனக் கவலையைத் தீர்த்தருளி, அவன் நினைத்த எல்லாவற்றையும் வழங்குவான். கன் முருகாற்றுப்படையை என்ருர், பிறவிப் பிணி அயைத் தீர்க்கும் தன்மையுடையதாதலால், 'கற்றதல்ை ஆய பயன்என்கொல் வாலறிவன், கற்ருள் தொழாஅர் எனின்" என்னும் குறளில் கற்ருள் என்பதற்கு, பிறவிப் பிணியைத் தீர்க்கும் திருவடி என்று பரிமேலழகர் உரை விரித்தார். அந்த நன்மையையே இங்கும் கொள்ளவேண்டும். தற்கோல- தன்னக் காப்பாற்றிக்கொள்ள முன்-பாரா யணம் செய்பவனுக்கு முன்னலே, கோலம்- அழகு தான் என்றது பாராயணம் செய்பவனே. இடரை நீக்கி இன்பத் தைத் தருவான் என்றபடி) எனவே திருமுருகாற்றுப்படையைப் பாராயணம் செய்பவர்களுக்கு முருகப் பெருமானுடைய திவ்ய தரிசனமும், இடர் நீக்கமும், கினைத்த விருப்பங்கள் கைகூடுவதும் கிடைக்கும் என்பதை இந்தப் பாடல் தெரி விக்கின்றது. திருமுருகாற்றுப்படை சங்க நூல் வரிசையுள் ஒன்ருகிய பத்துப்பாட்டில் முதலில் கிற்பது. அதனேடு சைவத் திருமுறைகளில் ஒன்ருகிய பதினேராம் திரு முறையில் தொகுக்கப் பெற்ற நூல்களில் ஒன்ருகவும் விளங்குகிறது; பன்னிருவர் பாடிய காற்பத்தொரு நூல் களைக் கொண்ட அத் தொகுதியில் 18-ஆவது நூலாகக் கோக்கப் பெற்றுள்ளது. நக்கீரர் பாடியனவாகப் பதினேராங் திருமுறையில் பத்து நூல்கள் உள்ளன . அவற்றில் ஒன்பதாவதாக இருப்பது இது. மற்ற . ஒன்பது நூல்களும் சங்க காலத்தில் எழுந்தனவா என்பதில் ஆராய்ச்சியாளர்களுக்குள் கருத்து வேறுபாடு உண்டு. ஆனல் திருமுருகாற்றுப்படை நக்கீரர்