பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/446

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432 திருமுருகாற்றுப்படை விளக்கம் திருவாக்கு என்பதை யாரும் ஐயுறுவதில்லை. சைவத் திரு. முறைகளில் சேர்க்கப் பெற்ற நூல்களுள் மிகவும் பழமை யாக உள்ளது திருமுருகாற்றுப்படையே என்று உறுதியாகச் சொல்லலாம். சங்க நூல்களுக்கும் ைச வ நூல்களுக்கும் இணைப்புப் பாலம் போல விளங்கும் இந்தத் தெய்விக நூல் என்றும் மங்கலமாய் ஒளிர்கிறது. சங்க நூல்கள் இடையிலே சில காலம் வழக்கு ஒழிந்து மறைந்து கின்றன. தமிழ்ப் பெரும் புலவராகிய மகா மகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் அவதாரம் செய்து அந்த நூல்களே வெளிக் கொணர்ந்தனர். அதன் பிறகு தமிழ்நாடு முழு. வதும் அவை பரவலாயின. அவர்கள் காலத்துக்கு முன் சில காலம் சங்க நூல்கள் ஒளி மழுங்கி யிருந்தன. ஒரே ஒரு நூல் மட்டும் மற்ற நூல்களைப் போல மங்காமல் ஒளிர்ந்தது. அதுவே திருமுருகாற்றுப்படை. சைவத். திருமுறைகளில் கோக்கப் பெற்றிருந்தமை அதற்கு ஒரு காரணம். மிகப் பழங்காலக்தொட்டே இது பாராயண நூலாக இருந்தது மற்ருெரு காரணம். வேதங்கள் வாய். மொழியாகவே வந்து நிலவுவது போலத் திருமுருகாற்றுப் படையும் பாராயண நூலாக இருந்தமையால் எந்தக் காலத்தும் மறைவின்றி மங்கலின்றி வழங்கி வந்தது இதற்குப் பலர் உரை எழுதினர். r அப்படிப் பாராயணம் செய்பவர்களுக்கு நூல். முடிந்தவுடன் முருகனே கேரே துதித்துப் பாடவும், பயன் இன்னதென்று கினைத்துக் கொள்ளவும் பத்து வெண் பாக்களே யாரோ அன்பர் பாடி வைத்தார். அவை: தெளிவான கடையில் பக்தியை எழுப்பும் வகையில் அமைந்தமையால் திருமுருகாற்றுப்படையைப் பாராயணம் செய்பவர்கள் அவற்றையும் சேர்த்துக் கூறலானர்கள். இந்த வகையில் அந்த வெண்பாக்களும் திருமுருகாற்றுப்படை. யோடு ஒட்டிக் கொண்டன. #