பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 - திருமுருகாற்றுப்படை விளக்கம் விட்டுப் புறப்பட்டு விட்டார். அவர் புறப்பட்டபோது இரங்கியதைச் சிவப்பிரகாச சுவாமிகள் பின்வருமாறு சீகாளத்திப் புராணத்தில் பாடுகிருர்: " என்றினி மதுரை காண்பேம்! எப்பகல் சவுந்த ரேசள் தன்திரு வடிகள் காண்பேம்! தாயைஎஞ் ஞான்று காண்பேம்! வென்றிவேல் தரும வேந்தர் வேந்தனை எந்நாட் காண்பேம்! ஒன்றுயிர்த் துணையாம் சங்கத் துறவைஎப் பொழுது காண்பேம்' திருப்பரங்குன்றத்திற்குப் பக்கத்தில் வந்து சேர்ந்தார் நக்கீரர். அப்போது பூசை செய்யும் நேரம் ஆயிற்று. அவர் ஒவ்வொரு நாளும் சிவபூசை செய்கிறவர். அங்கே ஒரு பொய்கைக் கரையில் அமர்ந்து சிவபூசை செய்யத் தொடங் கினர். அந்தக் கரையில் பெரிய ஆலமரம் இருந்தது. அவர் பூசை செய்யும்போது அந்த ஆலமரத்திலிருந்து ஒரு பழுப்பு இலை கீழே விழ, அதன் ஒரு பகுதி ரிேலும், மற்ருெரு பகுதி கிலத்திலும் கிடந்தன. திடீரென்று நீரில் கிடந்த பகுதி மீளுகவும். கிலத்தில் கிடந்த பகுதி பறவையாகவும் மாற. ஒன்றின ஒன்று இழுத்துக்கொண்டது. இதனை விக்கீரர் கண்டார். சிவபூசை செய்யும்போது வேறு ஒன்றிலும் மனம் செல்லாமல் செய்வது முறை. அப்படியின்றி இந்த அதிசயத்தின் மேலே கண்ணே ஒடவிட்டார். அந்தச் சமயம் பார்த்து அங்கே யிருந்த கற்கிமுகி என்ற பூதம் கக்கிரரை எடுத்துச் சென்று அருகிலிருந்த குகையில் அடைத்துவிட்டது. அந்தப் பூதத்திற்குக்கூட ஓர் உண்மை தெரிந்திருந்தது. காரணம் இல்லாமல் யாரையும் தண்டிக்கக் கூடாது. ஏதாவது ஒரு குற்றத்தைச் சுமத்தியே