பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 பிறந்த கதை فه= தண்டிக்க வேண்டுமென்று எண்ணி இந்தக் காரியத்தைச் செய்தது. சிவபூசை செய்யும்போது மனம் திரும்பிய குற்றத்திற்குரிய தண்டனேபோல அது அமைந்தது. குகைக்குள் சென்ற நக்கீரர் தமக்கு முன்னே அங்கே ஒரு பெரும் கூட்டம் இருந்ததைக் கண்டார். அவர்கள் எல்லாம் அவரைக் கண்டவுடன் ஆரவாரித்துக் கூக்குரல் இட்டனர். "படுபாவி! நீ வந்து சேர்ந்தாயே" என்று அழுதார்கள். ஆர அமர விசாரித்தபோது உண்மை தெரிந்தது. கற்கிமுகி என்ற அந்தப் பூதம் இப்படியே பலரை ஏமாற்றிக் குகைக்குள் அடைத்து வந்தது. ஆயிரம் பேர்கள் நிரம்பியவுடன் ஒரு நாளில் அவர்களே எல்லாம் ஒரேயடியாக உண்டு இன்புறுமாம். இப்போது "999 பேர்கள்தாம் சேர்ந்திருந்தார்கள். நக்கீரர் ஆயிரம் என்ற கணக்கை கிரப்பி விட்டார். "இனிமேல் எங்களுக்கு இங்கே வேலை இல்லை. அந்தப் பூதத்தின் வயிற்றில் போக வேண்டியதுதான். அந்தக் காரியத்தைச் செய்வதற்கு ே காரணமானயே!" என்று அங்கிருந்தவர்கள் யாவரும் கக்கீரரிடம் கோபத்துடன் பேசினர்கள், நக்கீரர் சிந்தனை செய்தார். காம் செல்லும் இடத்திலும் இப்படித் தீங்கு நிகழ்கின்றதே' என்று வருந்தினர். "எம்பெருமானே, உன் திருவுள்ளக் கிடக்கையை நான் அறியேன். இப்போது இந்தப் பாவியில்ை இத்தனே பேர் களுக்குத் துன்பம் வந்து விட்டதே' என்று இரங்கினர். பின்பு முருகப் பெருமானின் கினைவு வந்தது. அவர் இருந்த இடம் குகை அல்லவா? அதுவே இருதய குகையில் இருக்கிற முருகப்பெருமானது |கினேவை உண்டாக்கியது. எல்லாருடைய இருதய குகையாகிய தகராகாசத்திலும் இருப்பதல்ை முருகனுக்குக் குகன் என்னும் திருகாமம் உண்டாயிற்று. உடனே அந்தப் பெருமானே எண்ணிப் பாட