பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை

திருமுருகாற்றுப்படை சங்க இலக்கியத்தைச் சார்ந்தது. அதேசமயத்தில் அது முருக பக்தர்கள் பாராயணம் செய்யும் நூலாகவும் விளங்குகிறது. சைவத்திருமுறைகளில் பதினேராந் திருமுறையில் உள்ள நூல்களில் ஒன்று அது.

சங்ககால நூலாதலின் இந்த நூலின் நடை எளிதில் யாவருக்கும் புலனாவதில்லை. ஆனாலும் பக்தர்கள் பன்னெடுங் காலமாக இதைப் பாராயனம் செய்து வருகின்றனர். மந்திரங்களைச் சொல்வது போலச் சொல்பவரே பலர். என்ருலும் இதன் பொருளை தெரிந்து கொண்டு பாராயணம் செய்தால் இதனிடம் உள்ள ஈடுபாடு மிகுதியாகும். திருவாசகத்தில் சிவபுராணத்தின் இறுதியில், "சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார், செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப், பல்லோரும் ஏத்தப் பணிந்து" என்று வருகிறது. சிவபுராணமும் பலரால் பாராயணம் செய்யப்படுவது. அதைப் பொருள் உணர்ந்து ஒதினால் அதற்குத் தனிப் பயனுண்டு என்று அந்த அடிகளால் அறியலாம்.

திருமுருகாற்றுப்படையை யாவரும் எளிதில் உணரும் வகையில் விரிவுரை எழுதித் தெளிவுபடுத்தினால் பலரும் படித்துப் பயன்பெறுவர் என்று எண்ணினேன். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்த நூலின் விரிவுரையை ஆற்றி வந்தேன். அதைக் கேட்டவர்கள் நூல் வடிவில் எழுத வேண்டுமென்று விரும்பினர்கள். அவர்கள் விருப்பப் படி 'வழிகாட்டி'என்ற பெயரில் விரிவுரையை எழுதினேன். அதற்கு அமரர் திரு. வி. க. அவர்கள் சிறப்புரை வழங்கினர். இலக்கியச் செய்திகளை மிகுதியாகக் காட்டி அந்த நூலை எழுதினேன்.

அதன் பின்பும் பல இடங்களில் திருமுருகாற்றுப்படை யின் விளக்கத்தைத் தொடர் சொற்பொழிவுகளாக ஆற்றி வந்தேன். சமயத் தொடர்பான பல கருத்துக்களை இணைத்து விளக்கினேன். அந்தச் சொற்பொழிவுகளையே நூலாக்கினல் பின்னும் பலர் படித்துப் பயன் பெறுவார்கள் என்று