பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிபிறந்த கதை 37 தம் யாத்திரையைத் தொடங்கினர். வடக்கே காளத்தி சென்ருர், முருகப்பெருமான் நக்கீரரைக் காளத்திக்குப் போகச் சொன்னதில் ஒரு பொருத்தம் இருக்கிறது. உமாதேவி யாரின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் இல்லையென்று வாதிட்ட குற்றத்தைச் செய்தவர் நக்கீரர். காளத்தியிலே எழுந்தருளியிருக்கும் அம்பிகையின் திருகாமம் ஞானப் பூங்கோதை என்பது. ஞானப் பிரசூனம்பிகை என்று வடமொழியில் சொல்வார்கள், அம்பிகையினுடைய கூந்தல் ஞானமண்ம் வீசுவது என்ற கருத்தை அந்தப்பெயர் புலப்படுத்துகிறது, தன் கூந்தலில் இயற்கை மனம் உண்டென்பதை நன்கு தெரிவிக்கிற விலாசத்தோடு அந்தத் தலத்தில் அம்பிகை எழுந்தருளியிருக்கிருள். ஆகையால் அங்கே சென்ருல் அந்தப் பெருமாட்டியின் திருவருளால் உணர்வு பெற்றுப் பாவம் நீங்கும் என்ற எண்ணத்துடன் முருகப்பெருமான் நக்கீரரைக் காளத்திக்குப் போகச் சொன்னன். நக்கீரர் காளத்திக்கு வந்து அங்கே ஒடும் பொன்முகலி என்னும் ஆற்றில் ரோடி எழுந்தபோதே அவருக்குக் கைலாச தரிசனம் கிட்டியது: ஆற்றை விட்டுக் கரையேறிய வுடன் அவர் மீட்டும் தம்முடைய பழைய உருவத்தைப் பெற்ருர் ஆண்டவன் திருவருட் சிறப்பை எண்ணி வியந்து மனம் உருகிப் பாராட்டினர். இறைவன் கோபத் திற்கு ஆளானமையில்ை சிலருக்கு உண்டான தீங்கு களையும், அவன் திருவருளைப் பெற்றமையினலே சிலருக்கு உண்டான நன்மைகளையும் தொகுத்து, கோபப் பிரசாதம்' என்ற நூலைப் பாடினர். கைலபாதி காளத்தி பாதி அந்தாதி என்று ஒரு நூல் பாடினர். ஒரு பாட்டுக் காளத்தி யையும் அடுத்தது கைலேயையும் பாராட்டுவதாக அமைந்தது