பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 திருமுருகாற்றுப்படை விளக்கம் அது. பின்னும் காளத்தியிலே ஆண்டவன் திருவருளேப் பெற்ற கண்ணப்ப நாயனரைத் தரிசித்தார். அவரைப் பற்றி, "திருக்கண்ணப்ப தேவர் திருமறம்' என்ற நூலைப் பாடினர். இவ்வாறு சில நூல்களைப் பாடிவிட்டு அங்கே யிருந்து புறப்பட்டு மீட்டும் மதுரை வர்து சேர்ந்தார். ஆண்டவன் பாடின. 'கொங்குதேர் வாழ்க்கை' என்ற பாடலுக்குக் குறை கூறினதில் தொடங்கிய இந்த வரலாறு, திருமுருகாற்றுப்படையையும் காளத்தி சம்பந்தமான பிற நூல்களையும் நக்கீரர் இயற்றிப் புகழ்ந்ததோடு கிறைவடை கிறது. பெரியவர்கள் தவறு செய்தால் அது நன்மை யாகவே விளையும் என்ற உண்மையை இந்த வரலாற்றில்ை காம் உணர்கிருேம். இந்தக் கதையை வெவ்வேறு புராணங்கள் சொல் கின்றன. கற்கிமுகி என்ற பூதம் குதிரை முகம் உடையது. என்று பெரியவர்கள் சொல்வார்கள். இந்தக் கதையை அருணகிரிகாதப் பெருமான் தம்முடைய பாடல்களில் பல விடங்களில் குறித்திருக்கிரு.ர். - 'இவளிமுகி யைப்பொருத ராவுத்த ஞானவனும் ' என்று திருவகுப்பில் வருகிறது, 'துரகமு கக்கோ தைக்கிடை புலவரில் நக்கீரர்க்குதவியவேளே’ என்று திருப்புகழில் பாடுகிருர்,