பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதயம் மங்கலச் சொல் எந்த நூலைத் தொடங்கினலும் மங்கலச் சொல்லில் தொடங்குவது ஒரு வழக்கு இன்ன இன்ன சொற்கள் நூல்களின் முதலில் மங்கலச் சொற்களாக ஆள்வதற் குரியன என்று சொல்லும் இலக்கணம் ஒன்று பிற்காலத் தில் உண்டாயிற்று. அப்படி வரும் மங்கலச் சொற்கள் பலவற்றில் முக்கியமானது உலகம் என்பது. உலகம் என்ற மங்கலச் சொல்லில் தொடங்கும் நூல்கள் பல இருப்பதைப பார்க்கலாம். கம்பராமாயணம், "உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்' என்று தொடங்குகிறது. பெரியபுராணம். 'உலகெலாம் உணர்ந்து' என்று ஆரம்பிக்கிறது. திருமுரு காற்றுப்படையும், 'உலகம் உவப்ப" என்று தொடங்கு கிறது. - உலகம் தமிழ்நாட்டில் வாழ்ந்த புலவர்கள் இந்தியாவையோ, தமிழ் காட்டையோ தனித்துப் பார்ப்பது வழக்கம் அன்று. பொதுவாகப் பாரத நாட்டுப் பண்பாடு, உலகம் எல்லாம் வாழவேண்டுமென்பதே தன் வீடு, தன் காடு என்ற குறுகிய எண்ணத்தோடு இல்லாமல், உலகம் அனைத்தும் இறைவ அடைய படைப்பு. அதிலுள்ள உயிர்க் கூட்டங்கள் எல்லாம் இறைவனுடைய குழந்தைகள் என்ற எண்ணம் பெற்று வாழ்வதே இந்த காட்டுப் பண்பாடு. ஆதலால்தான் தமிழில் உள்ள சிறந்த நூல்கள் யாவுமே உலகம் முழுவதும்