பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 திருமுருகாற்றுப்படை விளக்கம் வாழ வேண்டுமென்பதை அங்கங்கே சொல்லியிருப்பதைக் காணலாம். "உலகம் முழுவதும் வாழ்க" என்று சொல் வார்கள், ஞானசம்பந்தப் பெருமான் சமணர்களோடு வாதிடும்போது வைகையை எதிர்த்துச் செல்லும் திருப் பாசுரத்தைப் பாடினர், அதில், 'வையகமும் துயர்தீர்கவே! y என்று அருளினர். அந்த வகையில் முருகப்பெருமானுடைய திருவருளே எண்ணி, அவன் இருக்கும் தலங்களே அடைந்து தரிசிக்க விரும்புகின்ற புலவனுக்கு. நக்கீரராகிய பெரும் புலவர் உபதேசம் செய்யத் தொடங்கும்போது முதலில் உலகத்தை சினேக்கிருர், முருகப்பெருமானுடைய திவ்வியத் திருமேனி செஞ்சுடர்ப் பிழம்பாக இருக்கிறது. அதற்கு ஒர் உவமை சொல்ல வருகிருர். பாலசூரியனுடைய கினேவு வருகிறது. சூரியனுக்கும், முருகப்பெருமானுக்கும் பல வகையில் ஒப்புமை உண்டு. பால சூரியனின் ஒளி சிவப்பு. என்றும் இளைய பிராளுகிய முருகப் பெருமானின் திருமேனி செக்கச் செவேல் என்று இருப்பது. பொதுவாக இறைவனைத் தேஜோமய விக்கிரகன் என்று சொல்வார்கள். அதனல் தான் சின்ன வாகனத்தில் பெரிய வடிவம் இருப்பதாகக் கற்பனை பண்ணியிருக்கிருர்கள். தேஜோமய விக்கிரகம் விநாயகப் பெருமான் யானைமுகம் உடையவன். அவன் உருவம் மிகப் பெரியது, அவனைத் தாங்கும் வாகனமோ மூவிகம். அது மிகச் சின்ன உருவம் உடையது. ஒரு நண்பர் என்னேக் கேட்டார்; 'யானையின்மேலே மூவதிகத்தை வைக்காமல் மூஷிகத்தின் மேலே யானையை வைத்தார்களே. இது பொருத்தமா?' என்று கேட்டார். அந்த யானே கம்மைப்போன்ற புலால் உடம்பினலானது என்ருல்