பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதயம் 4. பொருத்தமில்லாமல் இருக்கும். ஆனல் இறைவனுடைய திருமேனி அத்தனையும் சுடர்த்திருமேனி; திவ்ய தேஜோ மயமானது. நெருப்புக் கொழுந்துக்குக் கனம் உண்டா? சினிமாவில் பெரிய கோட்டை கொத்தளங்களே எல்லாம் அட்டையில்ை பண்ணி நிறுத்தி வைக்கிரு.ர்கள். தோற்றத் திற்குப் பெரிய மாளிகை போலத் தோன்றுகிற அவைகளே. கனம் இல்லாமல் இருக்கும்போது, வெறும் சுடர்க் கொழுந்துக்குக் கனம் இருக்குமா? மூஞ்சூறின்மீது யானே இருப்பது ஆச்சரியம் அன்று. எறும்பின் மேலே கூட இருக் கலாம் அல்லவா? இம்முடைய புலால் உடம்புக்குக் கனம் உண்டு. இதில் கனம் ஏறுவதை சிறுத்துப் பார்க்கின்ற இயந்திரங்களே வைத்திருக்கிருர்கள். நம்முடைய வாழ்க் கைப் பயணத்தில் காம் சரீரத்தை மறப்பதே இல்லேரெயில்வேப் பிரயாணம் செய்பவர்கள் சரீரத்தை மறந்து விடாமல் அதை கிறுத்துப் பார்த்து, எத்தனை பவுண்டு. கனம் என்று தெரிந்துகொள்ளும்படி அங்கங்கே பொறிகளை வைத்திருக்கிருர்கள். இறைவன் கருணையில்ை திருமேனி கொள்கிருன். அது திவ்ய தேஜோமயமான விக்கிரகம். ஒளி படைத்த திருமேனி அது. தேவர்கள் யாவருமே ஒளி படைத்த திருமேனி உடையவர்கள். இறைவன் திருமேனி அகக் கண்ணினல் பார்ப்பதற்குரியது. "அருட் பெரும் சோதி' என்று இராமலிங்க வள்ளலார் அடிக்கடி பாடி வயிருப்பது அந்தக் கருத்தைக் கொண்டுதான். ஆகவே முருகப்பெருமான் சோதிகளில் பெரிய சோதி. 'அருவமும் உருவு மாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்ருய்ப் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகி’ என்று கந்தபுராண ஆசிரியர் பாடுகிருர்.