பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதயம் 43.1, உதய ஞாயிறுபோல அவனுடைய திருமேனி சோதி" வீசும் என்கிருர் க்ரேர். இளவள ஞாயிறு போல முருகப்பெருமருமான் எழுந்தருளுகிருன் என்று சொல்ல வருகிருர், கதிரவன் புகழ் கதிரவன் கண் கண்ட தெய்வம். மற்ற மற்றத் தெய்' வங்களேத் தியானம் செய்து தரிசனம் செய்யவேண்டுமே யொழியச் சூரியசீனப்போல யாவரும் காண அவை உலா வருவது இல்லே, சூரியன் எழுந்தால் உலகம் முழுவதும் ஒரு தனிக் கிளர்ச்சி அடைகிறது. உயிருள்ள பொருள்களும் உயிர் இல்லாத பொருள்களும் சிறப்பை அடைகின்றன. இராக் காலத்தில் உலகம் முழுவதற்கும் சேர்ந்தாற்போல் ஒரு சாவு வந்தாற்போல யாவும் அமைதியாக இருக்கும். அவரவர்கள் கைகால்கள் அசைவு இன்றி, மூச்சு மாத்திரம் வரப் படுக்கையில் கிடக்கிருர்கள். அப்போது அவர்களுடைய கண் கண்ணுகப் பார்ப்பது இல்லை. காது காதாக இருப்பது இல்லை. கருவி கரணங்கள் எல்லாம் தங்களுக்குரிய செய்கைகளைச் செய்யாமல் ஒடுங்கிக் கிடக்கின்றன. அது ஒரு வகையில் இறப்பது போன்றது. வள்ளுவர், 'உறங்குவது போலும் சாக்காடு' என்று. சொல்லுவார். ஒவ்வொரு நாளும் எல்லோரும் உறங்கும்படியாக வருகிற இரவைத் தினப்பிரளயம் என்று திருமூலர் சொல்வார். அப்படி உயிர்கள் தம்முடைய இயல் பினின்றும் மாறிச் செயல் இழந்து கிடக்கிற இராக்காலம் மாறினவுடன் சூரியன் தோன்றுகிருன். கதிரவன் தோன்றியவுடன் மனிதன் மனிதனுகிருன். பறவை பறவை யாகிறது. பறவைக்குச் சிறப்பாக உள்ள சிறகுகள் அப்பொழுது தொழில்படுகின்றன. தம் கூட்டிலிருந்து