பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~44 திருமுருகாற்றுப்படை விளக்கம் சிறகை அடித்துக் கொண்டு வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குகின்றன. மனிதன் படுக்கையிலிருந்து எழுந்த பிறகு என்ன என்ன செய்யவேண்டுமென்று எண்ணிப் பேசிச் செயலைத் தொடங்குகிருன். தவருன காரியங்கள் யாவும் பெரும்பாலும் இரவில் கடக்கின்றன. இரவு போன பிறகு காலையில் உதய மாகும் சூரியனுடைய ஒளியில் ஊக்கமும், முயற்சியும், கன்மையும் அதிகமாகின்றன. இத்தகைய சூரியனே உலகம் முழுவதும் வரவேற்கிறது. அவன் எழுந்து வானத்தில் உலா வரும்போது உலகம் முழுவதுமே .உலா வருகிறது. ஆகவே சூரியனைப்பற்றிச் சொல்ல வர்த நக்கீரர் அவன் உலகம் எல்லாம் உவக்கும்படியாக வானத்தில் எழுந்தருளுகிருன் என்பதைச் சுட்டுகிருர். உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு என்று திருமுருகாற்றுப்படை உதயமாகிறது. எல்லாப் பொருளுக்கும் உரத்தைத் தந்து வளத்தைத் தருவது கதிரவன். வானத்தில் மிக்க வெற்றியோடு எழுந்து உலாவுகிருன், வலமாக எழுந்து திரிதருவதாக நக்கீரர் பாடுகிருர். f உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு. குரியனேப் புகழாதார் யாரும் இல்லை. சாதி சமயம் கடந்து யாவராலும் புகழப்படுபவன் அவன்;அறிவாளிகளும் அறிவற்றவர்களும் கதிரவனைப் புகழ்கின்ருர்கள். இந்து சமயத்தில் சூரியனைக் கடவுளாகக் குமபிடும் சமயம் ஒன்று உண்டு; அதற்குச் செளரம் என்று பெயர். பஞ்சாயதன பூசை என்று சொல்கிற வழிபாட்டில் குரிய வழிபாட்டுக்கு ஒர் இடம் உண்டு. சிவ பூசையிலும்