பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதயம் 45; இடம் உண்டு. கோயில்களில் சூரியனுக்கு என்று. தனியே ஓர் இடம் இருக்கிறது. சூரியனுக்கு என்று. தனிக் கோயில்கள் உண்டு. தமிழ்நாட்டில் சூரியனர் கோயில் என்ற ஒரு தலம் இருக்கிறது. வடக்கே கோளுர்க்கம் என்ற தலத்தில் சூரியனுக்குத் தனிக் கோயில் இருக்கிறது. பிற காடுகளில் சூரியனை வழிபட்டு கலம் பெறுகிறவர்கள் பலர், சூரியனுடைய வணக்கத்தைப் பழங்கால நூல்கள் நன்கு தெரிவிக்கின்றன. வேதத்திலுள்ள ஆருணம் என்பது சூரிய வணக்கத்துக்குரியது. அகத்தியர் இராம பிரானுக்கு ஆதித்திய இருதயம் என்ற கதிரவன் துதியை உபதேசம் செய்தார். தமிழில் சிறந்த காட்பியமாகிய சிலப்பதிகாரம் முதலில் சந்திரனேயும், பின்பு சூரியனையும் புகழ்கிறது. . 'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்' என்று தொடங்கும் கதிரவனது வாழ்த்துப் பாடல் அமைந்திருக்கிறது. இப்படிப் புலவர்கள் பலரும் புகழ் பேச விளங்குவது ஞாயிறு. . . பலர் புகழ் ஞாயிறு. உதய ஞாயிறு உவமை சூரியன் கீழ்கடலில் உதயமாகிருன். Işä@Jiř · பாண்டிய நாட்டில் வாழ்ந்தவர். அவர் கீழ் கடலுக்குச் சென்று உதயத்தைக் கண்டிருக்க வேண்டும் கண் கொள்ளாப் பேரழகோடு செக்கச்செவேல் என்று அவன் தோன்றும்போது அந்த அழகில் அவர் ஈடுபட்டிருக் கிரு.ர். அது அவருக்கு கெஞ்சில் கின்றிருக்கிறது. இருள் கப்பிய குகையில் இருக்கும்போது அதற்கு கேர்"