பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~46 - திருமுருகாற்றுப்படை விளக்கம் மாருன கதிரவனது கினேவு வருகிறது. ஞானகுரியளுகிய முருகப்பெருமானுக்கு அவனே உபமானமாகச் சொல்ல வேண்டுமென்று தோற்றுகிறது. பால சூரியன் எல்லோரும் கண்ணிலே காணும் வண்ணம் லேப் பெரும் பரப்பாகிய கடலின் மேலே தோன்றிற்ைபோல முருகன் தோன்றுவான் என்ற கருத்தை முதலில் தெரிவிக்கிருர். நீல வானம் மேலே இருக்க, லேக்கடல் கீழே பரந்து விற்க, அவற்றினிடையே சூரியன் தோன்றுகிருன். நீலத் தோகை விரிந்து இருக்க, லே உடம்பையுடைய மயிலின் மேல் செக்கச்செவேல் என்று முருகன் எழுந்தருளுகிருன். உதய சூரியனும், உலாவரும் முருகனும் உவமையாகிருர்கள். உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு கடற் கண்டாஅங்கு. முருகப் பெருமான நம்முடைய உள்ளக் கண்ணில் தரிசனம் செய்வதற்குரிய வழியைக் காட்ட வருகிருர் கக்கீரர். தெரிந்ததைக் கொண்டு தெரியாததைச் சொல்வது பெரியவர்களுடைய இயல்பு. திருவள்ளுவர் முதல் குறளில் தெரிந்த உலகத்தைக் கொண்டு தெரியாத ஆதிபகவனேப் பற்றிச் சொன்னர். அதுபோல் இங்கு மயில்மேலே எழுந்தருளி வரும் முருகப் பெருமான கமக்கு நினைப்பூட்டுவதற்குக் கடலின்மேல் உதயமாகும் கதிரவனை உவமையாக எடுத்துச் சொன்னர் நக்கீரர். அந்த உவமையைக் கொண்டு இந்த ஞாயிற்றுக்குரிய கால எல்லே, இட எல்லே ஆகியவை முருகனுக்கும் உண்டென்று எண்ணக்கூடும் அல்லவா? ஆகையால் முதலில் ஒப்புமை கூறிய பின்பு வான சூரியனுக்கும், ஞான சூரியனுக உள்ள முருகப்பெருமானுக்கும் உள்ள வேறுபாட்டைச் சொல்ல வருகிருர்,