பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதயம் - 47 வேறுபாடு முருகப்பெருமான் தேசு சிறைந்த திருமேனியன். சூரியனும் சுடர் உருவன். சூரியனுடைய சுடர் புறக் கண்ணுக்குப் புலனுவது. முருகப்பெருமானுடைய திருவுருவம் அகக்கண்ணுக்குப் புலனுவது. இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. சூரியன் தன்னுடைய சுடரை வீசும் போது ஒரு குறிப்பிட்ட பகுதியில்தான் வீசலாம். காம் இருக்கும் உலகத்தின் பக்கத்தில் கதிரவன் சுடர் வீசும் போது அமெரிக்க நாட்டில் இரவாக இருக்கும், சூரியன் இட எல்லைக்குள் அடங்கியவன். அப்படியே அவன் கால எல்லைக்குள்ளும் அடங்குபவன், சூரியனே ஒரு மேகம் மறைத்துவிடலாம். சூரிய கிரகணம் உண்டாகும்போது அவன் ஒளி மறைகிறது. எல்லாம் அடங்கிய மகாப்பிரளய காலத்தில் சூரியனும் அழிந்துவிடுவது உண்டு. ஆகையால் அவன் கால எல்லைக்கும், இட எல்லைக்கும் அகப்பட்டவன். முருகனே சூரியனைப் போல ஒளியுடையவன் என்ருலும் கால எல்லை, இட எல்லே இரண்டுக்கும் அப்பாற்பட்டு விளங்குபவன். இந்தக் கருத்தை நக்கீரர் சொல்ல வருகிரு.ர். முருகப்பெருமானுடைய அற்புதமான தேசு எப்படி இருக் கிறது என்பதை மூன்ருவது அடியில் சொல்கிருர், ஓஅற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி. அந்த ஒளி தியானம் பண்ணுவாருடைய உள்ளத்தில் விட்டு விளங்குகிறது. யார் யார் முருகன் திருவுருவத்தைக் காணும் பாக்கியம் பெற்ருர்களோ அவர்களுடைய உள்ளத்தையும், கண்ணேயும், வாழ்வையும் ஒளி மய மாக்குவது அவனுடைய திவ்ய தரிசனம். அந்த ஒளி ஒஅற இமைக்கின்றது. ஓஅற என்பதற்கு இடைவிடாமல், நீக்கம் இல்லாமல் என்பது பொருள். கால எல்லே இல்லாமல்