பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 திருமுருகாற்றுப்படை விளக்கம் அவிர்கின்ற ஒளி ஆதலின் இடை விடாது ஒளி வீசுகின்றது. இறைவனுடைய திருவருளால் ஒளி பெறுகின்ற பொருள்கள் மூன்று. அவற்றை மூன்று சுடர்கள் என்று சொல்வார்கள். சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய இந்த முன்று சுடர் களுக்குள் சூரியன் மிகப்பெரியவன். அவனினும் சிறியது. சந்திரன். இந்த இரண்டையும் விடச்சிறியது அக்கினி. இந்த மூன்றும் முற்றும் மங்கும் காலம் உண்டு. அந்தக் காலத் திலும் ஒளிவீசுவது இறைவன் திருவுருவம். அதற்குக் கால எல்லே இல்லை. துளக்கமின்றி ஒளிர்கின்ற சோதி அது. அதல்ை அதை, "ஒவற இமைக்கும் அவிர் ஒளி' என்று. சொன்னர், - இட எல்லேயையும் கடந்து விளங்குவது அப்பேரொளி என்று மேலே சொல்ல வருகிருர், சேண் விளங்கு அவிர் ஒளி, சேண் என்பதற்கு கெடுந்துாரம் என்று பொருள். குரிய ஆணுடைய ஒளி கதவை அடைத்தால் உள்ளே புகுவது இல்லே, கண்ணே மூடிக்கொண்டால் உள்ளே புகுவது இல்லை. பூமியின் மற்ருெரு பாகத்திலும் சாருவது இல்லை. மனிதனுடைய உள்ளத்தில் இருக்கும் அறியாமை என்னும் இருக்ளப் போக்குவதற்கு இந்த மூன்று சுடர் களாலும் முடியாது. எத்தனே ஒளியுடனும். வெப்பத் துடனும் சூரியன் கதிரை வீசினலும் மனிதனுடைய அறியாமை இருட்டைப் போக்குவதற்கு அந்தக் கதிரினல் ஆகாது. முருகப்பெருமானுடைய அவிர் ஒளியோ எல்லே கடந்தது. நுட்பமான பொருள்களிலும் புகுந்து வீசுவது. உண்மையைச் சொல்லப்டோனல் ஆண்டவன் மனித