பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதயம் 49 ணுடைய இதய குகைக்குள் ஒளியாக இருக் கிருன். அதனல் குகன் என்ற பெயர் வந்தது. வேறு எந்த ஒளியிலுைம் அடைவதற்கரிய அந்த உள்ளிடத்தை அவனுடைய ஒளிதான் அடைந்து சிற்கிறது. அதனை காம் உணர்வதில்லையேயொழிய அந்த ஒளி எப்போதும் அங்கே விட்டு விளங்குகிறது. விளக்கை மரக்காலப் போட்டுக் கவிழ்த்துவிட்டால் அதனுடைய வெளிச்சம் வெளியில் தெரியாது அது போல கம்முடைய இதய குகையில் ஒளிர் கின்ற அந்தப் பேரொளியை அகங்தை என்னும் மரக்கா லால் மறைத்து வைத்திருக்கிருேம். அதனல் அந்த ஒளி வெளிப்படுவதில்லை. 'குகையில் வளரும் கனலே' என்று பாரதியார் பாடுகின்ருர். மலையின்மேலே ஒரு விளக்கைப் போட்டால் அதன் கதிர் பல விடங்களுக்கு வீசும். மலேயின் உள்ளே இருக்கும் குகைக்கு நடுவில் கொண்டுபோய் அதை வைத்து விட்டால் அதன் ஒளி வெளியில் பாயாது. அப்படி கம்முடைய உள்ளக் குகையில் அந்தப் பேரொளியை வெளியிலே பரவ விடாமல் வைத்திருக்கிருேம். அப்படிச் சொல்வதைவிட அந்த ஒளி வெளியில் பரவாமல் நாம் நம்முடைய அகங்தை யிலுைம், மமகாரத்தினுலும் அடக்கி வைத்திருக்கிருேம் என்று சொல்வது பொருத்தம். - முருகப்பெருமானுடைய பேரொளியானது காலம் கடந்து இடம் கடந்து ஒளிர்வது என்பதை ஓர் அடியில் கக்கீரர் விளக்குகிரு.ர். - ஒவற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி. முருகன் உலகம் எல்லாம் உவக்கும்படியாக எழுந்து, மயில்மேலே உலா வருகிற தோற்றத்திற்குச் சூரியனே . திரு-4 - -