பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 திருமுருகாற்றுப்பட்ை விளக்கம் உவமையாக எடுத்துச் சொல்லலாம். ஆனல் முருகப் பெருமானுடைய பேரொளி காலம் கடந்து, இடம் கடந்து விளங்குவதாதலின் அந்த ஒளிக்குச் சூரியனை உவமை யாக்க முடியாது என்ற குறிப்பு இந்த அடிகளால் நமக்கு விளங்குகிறது. உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு ஒவற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி. (உலகில் உள்ள உயிர்களெல்லாம் மகிழும்படி வலமாக எழுந்து வானத்தில் உலாவும், பல வகையான அறிஞர் களும் புகழும், கதிரவனேக் கடலின் மேலே உதய மாகும் போது கண்டாற்போல, இடையீடு இல்லாமல் சுடர் விடுகின்ற, கெடுந்துாரத்திலும் சென்று விளங்கும், பரவிய ஒளி-இதை உடைய முருகன் என்று சொல்ல வருகிருர்)