பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாணுதல் கணவன் திருவுருவம் நெடுக்காரத்திலிருந்து அழகிய மனிதன் ஒருவன் வருகிருன். அவன் வரும்போது அவனுடைய முழு உருவமும் ஒருவாறு விளங்குமேயன்றி அவனுடைய அங்க அடையாளங்கள் தெளிவாக விளங்கா. நெடுந்துாரத்தில் எழுந்தருளியிருக்கிற முருகப் பெருமான கமக்குச் சுட்டிக் காட்டுவார் போல அவனுடைய ஒளிப் பிழம்பான திருமேனியை முதலில் சொன்னர் நக்கீரர். பின்பு அந்தப் பெருமானுடைய அங்க அடையாளங்களைக் காட்ட வருகிருர். முருகன் ஒளிப் பிழம்பாக கின்ருலும் திருவுருவம் கொண்டு விளங்குகிருன். குறி குணம் கடந்த இறைவன் எண் குணத்தாளுகவும், தாள் முதலிய அங்க அடை யாளங்கள் உடையவனாகவும் எழுந்தருளுவது, ஆருயிர்கள் எல்லாம் உய்ய வேண்டுமென்ற பெரும் கருணையில்ை தான். " கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை ’’ என்று திருக்குறளில் இந்தத் தத்துவத்தைப் புதைத்து வைத்திருக்கிருர் வள்ளுவர், தனக்கெனக் குணமும், குறியும் இல்லாத எம்பெருமான் திருமேனியும் குணமும் கொண்டு வருவது உயிர்களேக் காப்பாற்றும் பொருட்டு. எண்குணம் உடையவனாகவும், தாள் முதலிய அங்கங்கள், உருவ அடையாளங்கள் உடையவனுகவும் எழுந்தருளுகிருன். அதல்ை மக்கள் அவனேச் சார்ந்து வணங்கி கலம் பெற முடிகிறது. -