பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 - திருமுருகாற்றுப்படை விளக்கம் திருவடிச் சிறப்பு இப்படி எண்குணத்தாகை, குணமும் குறியும் பெற்று ஆண்டவன் எழுந்தருளுவகை நக்கீரர் இங்கே காட்டு கிருர் ஆண்டவனுடைய திருமேனியில் அடிமுதல் முடி காறும் பல அங்கங்கள் உள்ளன, எல்லாம் அழகின் பகுதிகள்தாம். திருமேனி முழுவதும் பெரும் சோதிப் பிழம் பால்ை ஒவ்வோர் உறுப்பும் அந்தச் சோதிப் பிழம்பின் சுடர்க் கீற்றுகள். அவை எல்லாமே பேரழகு பொருந்திய அங்கங்கள். - அந்த உறுப்புகளுக்குள் எது சிறந்தது? இந்தக் கேள்வி சற்றுச் சங்கடமானது. மனிதனுடைய உடம்பில் 32 அங். கங்கள் இருக்கின்றன. அவற்றில் தக்லமையானது தக்ல தான். தலை என்ற பெயரே அது சிறப்பான அங்கமாதலால் அமைந்திருக்கின்றது. வடமொழியில் அதை உத்தமாங்கம் என்று சொல்வார்கள். நம்முடைய உடம்பில் ஐந்து வகை யான இந்திரியங்கள் இருக்கின்றன. காண்பதற்கும், கேட்ப தற்கும், மணம் நுகர்வதற்கும். சுவை நுகர்வதற்கும், பரிசத் தைப் பெறுவதற்கு மாக ஐந்து இந்திரியங்களே நாம் பெற். 1றிருக்கிருேம். கழுத்துக்கு மேலே இந்த ஐந்து பொறி களும் இருக்கின்றன. கழுத்துக்குக் கீழே பஞ்சேந்திரி யங்களில் ஒன்றுதான் இருக்கிறது. ஆதலின் எல்லா இந்தி ரியங்களும் ஒருங்கே அமைந்திருக்கிற தலை சிறந்ததாயிற்று. அறிவின் கிலேயமாகிய மூளை தலையில் இருக்கிறது. அதோடு மனிதன் கி.மிர்ந்து விற்கிறவன். ஆகையால் அவன் உடம்பில் உயரமாக இருப்பது தலை. இத்தனை காரணங்களால் அதனே உத்தமாங்கம் என்று சொல்வார்கள். இறைவனுடைய திருமேனியில் மிகச் சிறந்த அங்கம் எது? மனிதனைப்போல இறைவனுக்கும் தலேதான்