பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாணுதல் கணவன் . 53 உத்தமாங்கம் என்று சொல்லலாமா? அது பிழை. இறை வனேக் காட்டிலும் அவன் திருவடி சிறந்தது என்பதைப் பரிபாடலில் ஒரு புலவர் பாடுகிருர். 'கின்னிற் சிறந்தநின் தாளினையவை.' அடியார்களுக்குப் பற்றுக்கோடாக இருப்பது அவனுடைய தாள். அவன் மிக உயரமானவன். அவனைப் பற்றிக் கொள்வது என்பது எளிய காரியம் அன்று. தேவர்களுக்கு அடி பூமியில் பாவாது என்று சொல்வார்கள். தேவர் களுக்கு எல்லாம் சிறந்த தேவகை ஆண்டவன் இருக் கிருன். அவன் இந்த உலகத்தில் தன் தாள் படிய வருகிருன். அதற்குக் காரணம் காம் இந்த உலகத்தில் பிறந்து வாழ்வது தான். நம்மை ஆட்கொள்ள வேண்டு மென்று நமக்கு அண்மையில் உள்ள திருவடியைப் பற்றிக்கொள்ளும்படி வந்து அருளுகிருன். நமக்காகவே தாள். படைத்து நம்மை அணுகி வருகிருன். ஆதலால் அவன் திருத்தாள் அடியார் களுடைய பற்றுக் கோடாக சிலவுகிறது. இறைவனுக்குப் பல வகை அங்கங்கள் இருந்தாலும், அவற்றை எல்லாம் அடியவர்கள் கண்டு இன்புற்ருலும், அவர்கள் பெரும் பயன் பெறுவது அவனுடைய திருவடியில்தான். அடியார் என்ற பெயரே அதனேக் குறிப்பிக்கிறது. - தாங்கும் தாள் ஆகவே, ஒளிப்பிழம்பாகிய முருகனைக் காட்டிய நக்கீரர் அவனுடைய அழகிய அங்கங்களைச் சுட்டிக் காட்டத் தொடங்கி, முதலில் அவனுடைய திருத்தாளப் பற்றிச் சொல்ல வருகிருர், அது மிகவும் வலிமை பெற்ற தாள்: தன்னை அடைந்தார்க்கு கலம் செய்கின்ற தாள்.