பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 . திருமுருகாற்றுப்படை விளக்கம் உறுகர்த் தாங்கிய மதன் உடை கோன் தாள் என்று அதைப் பாராட்டுகிருர். அந்தத் தாள் தன்பால் அடைந்தவர்களே எல்லாம் தாங்குகிறதாம். அவர்கள்பால் உள்ள அறியாமையை உடைத்து ஒழிக்கிறதாம். உறுார் என்ருல் அடைபவர் என்று ஒரு பொருள். உலகத்தில் வேறு ஒரு காப்பும் இல்லாமல், தாம் அடையும் துன்பங்களைப் போக்குவதற்கு உலகிலுள்ள யாரும் துணையில்லை யென்பதனை உணர்ந்து, இறைவன் ஒருவன்தான் பாதுகாப்பு என்ற உண்மை அறிவு வரப் பெற்றவர்கள் அவனை அடைகிருர்கள். 'தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்ற லரிது’’ என்று வள்ளுவர் சொன்னர். உலகிலுள்ள மக்களுக்குள் அறிவாலும், ஆற்றலாலும், திருவாலும் உயர்ந்தவர்கள் பலர் இருக்கிரு.ர்கள். இவற்றில் படிப்படியாக உயர்ந்து கிற்கிறவர்களைப் பார்க்கிருேம். கீழ்ப் படியில் உள்ளவர்கள் மேல்படியில் உள்ளவர்கள் சிறந்து சிற்பதாக எண்ணுகிருர்கள். ஆகவே கீழ்ப்படியில் உள்ள வர்களுக்குக் குறை உண்டானல் அடுத்த படியில் உள்ளவர் களேச் சாருகிருர்கள். அந்தச் சமயத்தில் அவர்களுக்கு மேல்படியில் உள்ளவர்கள் சிறிது கலம் செய்தாலும், அவர் களும் குறைபாடு உள்ளவர்களாய் இருக்கிருர்கள். அவர்கள் தங்களுடைய குறைகளேத் தம்மிலும் மேற்படியிலுள்ள வர்களை அண்டிப் போக்கிக்கொள்ளலாம் என்று கினைக் கிருர்கள். இந்த வகையில் ஒவ்வொருவரும் தத்தமக்கு மேல் உள்ளவர்களேச் சார்ந்து தம் குறைகளைப் போக்கிக்கொள்ள லாமே என்று சினேக்கிருர்கள். ஆனல் யாரும் எல்லோரு டைய குறையையும் போக்க முடியாது. குறைவிலா விறை,