பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாணுதல் கணவன் 55 வுடையவனகிய ஆண்டவன் ஆருயிர்களுக்கு கலம் செய்யும் ஆற்றல் உள்ளவன். அவனே எத்தகைய குறையையும் போக்க வல்லவன்: எல்லாம் வல்லவன்: எல்லாவற்றையும் அருளுகிறவன். அவன் அருளால்தான் உலகம் இயங்கு கிறது. ஆருயிர்கள் உய்கின்றன. இந்த உண்மையை உணர்ந்த அடியார்கள் உலகில் உள்ள செல்வரையும் மற்றவரையும் சார்ந்து அடைக்கலம் புகாமல், இறைவன் ஒருவன்தான் நமக்குப் புகலாக இருப் பவன் என்று உணர்ந்து அன்போடு சாருகிருர்கள். அப்படிச் சாரும்போது ஆண்டவன் அவர்களேத் தாங்கி கிற்கிருன். தாங்குதல் என்ற சொல்லே பாரத்தைத் தாங்குதல் என்ற பொருளேத் தருகிறது. தான் தாங்குவதாக கினைத்து மனிதன் பற்றை வள்ர்த்துக் கொள்கிருன். மனைவி, மக்கள். உடம்பு முதலியவற்றைப் பாதுகாக்க வேண்டுமென்று பலபல செயல் களேச் செய்கிருள். ஆனல் அந்தப் பாதுகாப்புகளால் அவை காப்பாற்றப்படுவதில்லை. தாங்கும் திறன் மனித லுக்கு இல்லை. வண்டியில் செல்கிறவன் ஒருவன் தன்னு டைய கைப்பொருளைக் கீழே வைக்காமல் தலையின் மேலேயே தாங்கிக்கொண்டிருந்தால் அது எத்தனை மடமையோ அத்தகையதே. உலகத்தார் தாம் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டிருப்பதாக கினைப்பது. உண்மையில் எல்லா வற்றையும் தாங்கிக்கொண்டு கிற்கிறவன் ஆண்டவன். இறைவனைப் பற்றிக்கொண்டு நம்முடைய மனத்திலுள்ள கவலையைப் போக்கிவிட்டால் தலையில் தூக்கிக்கொண்டு வந்த பாரத்தை வண்டி ஏறினவுடன் அதில் வைத்து நலம் பெற்றவனைப் போலாகிருன். ஆண்டவனுடைய அடியார்கள் தம்முடைய கடமை இறைவனே ச் சரணுகதி அடைவது ஒன்றுதான் என்பதை ான்கு உணர்ந்தவர்கள், எந்த விதமான செயலும் இல் லாமல் அவனுடைய திருவடியைப் பற்றிக்கொண்ட