பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 - திருமுருகாற்றுப்படை விளக்கம் படியே கிடப்பது அடியார்கள் கிலே. வண்டியைப் பிடிக்கும் மட்டும் நாம் ஒடவேண்டுமே யன்றி வண்டியில் ஏறிக் கொண்ட பிறகு ஓடவேண்டிய அவசியம் இல்லை. அதுபோல் இறைவனேப் பற்றுக்கோடாகப் பெறும் மட்டும் அவனு டைய திருவடியைச் சாரப் பல முயற்சிகளைச் செய்ய வேண்டும். அவன் திருவடித் தொடர்பு பெற்றுவிட்டோ மாளுல், எனக்கு இனிச் செயல் இல் லே யென்று எல்லாவற் றையும் அவனிடம் ஒப்படைத்துச் சும்மா கிடத்தல்தான் முறை. அப்படிக் கிடந்தோரை ஆண்டவன் தாங்கிக் கொள்வான். - 'தன்க டன்அடி யேனையும் தாங்குதல் என்க டன்பணி செய்து கிடப்பதே." திரெளபதியின் கதை திரெளபதியின் கதை இதனை நன்கு தெரிவிக்கும். அறிவும், திருவும், ஆற்றலும் உள்ள கணவர் ஐந்து பேரை அவள் பெற்ருள். உலகம் போற்றுகின்ற பெருவீரர். அறம் கிறைந்த கெஞ்சினர். புகழுடையோர் அவளு டைய கணவர்கள். ஆயினும் நூற்றுவர் தலைவனுகிய துரியோதனன் அவளே மானபங்கம் செய்ய எண்ணினன். துச்சாதனனே விட்டு அவள் துகிலே உரியச் செய்தான். அரசர்கள் பலர் அந்த அவையில் அமர்ந்திருந்தார்கள். உறவினர்களும், கணவர்களும் அங்கு இருந்தார்கள். அறிவும். நீதியிலிருந்து பிறழா கேர்மையும் கிறைந்த நெஞ் சினர்கள் இருந்தார்கள். திரெளபதி தன்னுடைய கணவர் களுடைய ஆற்றலால் பாதுகாப்புப் பெறலாம் என்று எண்ணினுள். அவர்கள் வலியிழந்து போனர்கள். அறனும், நேர்மையும் உடைய பீஷ்மர் முதலியவர்கள் தன்னுடைய மானத்தைக் காப்பாற்றுவார்கள் என்று எண்ணினுள்.