பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாணுதல் கணவன் 57 அவர்களும் பொலிவிழந்து வலியிழந்து சின்ருர்கள். அவர் களிடம் பல பேசித் தர்க்கம் செய்தாள். அவளுடைய அந்த வாய் வன்மையும் வலியிழந்து போயிற்று. தன் கையால் துகிலப் பற்றிக்கொண்டாள். அதலுைம் பயன் இல்லை. தன் மானத்தைக் காக்கும் தகைமையுடையவன் கண்ணபிரான் ஒருவனே என்று உணர்ந்தாள். அவன் தான் பற்றுக்கோடு என்று தெளிந்து அவனே கினேந்து துதித்துப் புலம்பினள். அவள் தன் உடையைக் கையில்ை பற்றிக்கொள்ளும் வரைக்கும் கண்ணன் திருவருள் அவளுக் குக் கிட்டவில்லை. கடைசியில் அந்தக் கைகளையும் விட்டுத் தலைமேல் கை குவித்து, கோவிந்தா, கோவிந்தா' என்று அாற்றியபோதுதான், கண்ணபிரான் அவளுக்கு அருள் செய்ய முன்வந்தான்; துச்சாதனன் துகிலே உரிய உரிய, மேலும் மேலும் அவளுக்குப் பலபல வண்ண வண்ண ஆடைகளே வழங்கினன். இந்தக் கதையில் ஒரு பேருண்மை இருக்கிறது. பிறர் ாம்மைத் தாங்குவார் என்று எண்ணியிருந்த திரெளபதி. அவர்கள் தன்னைத் தாங்கும் ஆற்றல் இல்லாதவர்கள் என்பதை உணர்ந்தாள். தன்னைத் தானே தாங்கிக் கொள்ளலாம் என்று கடைசியில் எண்ணினுள். கடைசியில் அதுவும் பயன் அற்றுப் போயிற்று. யாரும் தாங்கமாட் டார்கள், ஆண்டவன் ஒருவன்தான் துணை என்ற கினேவு அவளுக்கு வந்த போதுதான் கண்ணன் அவளைத் தாங்க முற்பட்டான். இறைவனுடைய திருவருளில் கம்பிக்கை வைத்து, கம்முடைய வலியின்மையை நன்கு உணர்ந்து, நம்முடைய குறையை வேறு யாரும் தீர்க்க முடியாது என்ற உண்மையையும் தெரிந்து. அவனைச் சரணுகதி அடையும்