பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாணுதல் கணவன் - 59. அறிவுக்கு எதிர்மாருன அறியாமை கம்மிடத்தில் இருக்கிறது. அது பலபல பிறவிகளில் படலம் படலமாக வந்து செறிந்து கிடக்கிறது. கணக்கில்லாத பிறவியைப் பெற்றுப் பெற்று அந்த அந்தப் பிறவிதோறும் அடைந்த வாசனைகள் எல்லாம் படலம் படலமாகச் சார்ந்ததல்ை பாறையைப் போல அறியாமை செறிந்து கிடக்கிறது. அதனே எளிதில் உடைக்க முடியாது. ஆண்டவன் தாள் ஒன்றுதான் அதை உடைக்க வல்லது, தன்னை அடைக் தவர்களே எல்லாம் காலால் தாங்கும் பெருமான் அவன்தான். இறைவன் தாளே காம் அடையாமல் நிற்பதற்குக் காரண மான அறியாமையையும் அவனுடைய தாளில்ை உடைத்து விடலாம். ஆண்டவன் தாள் ஞானமயமானது என்று சொல்வார்கள். பிறரைத் தாங்குவதற்குரிய வல்லமையும் அவர்களுடைய அறியாமையை உடைப்பதற்கு உரிய வல்ல மையும் படைத்த தாள் அது; அது ஞானத் தேசுபடைத்தது. - 'தொண்டர்கண்டு அண்டிமொண் டுண்டிருக்கும் சுத்த ஞானமெனும் - தண்டையம் புண்டரிகம்' என்பது கந்தர் அலங்காரம். அறியாமையை உடைப்பதற். குரிய ஞான சொரூபமாக இருப்பது அந்தத் திருவடி. ஆகையால் தன்பால் அடைந்தவர்களைத் தாங்குவது மட்டு. மன்று: அவர்களுடைய அழுக்காகிய அறியாமையை அடி யோடு போக்குகின்ற ஆற்றலும் அந்தத் திருவடித் தாமரை பெற்றிருக்கிறது. சோதிப் பிழம்பாக முருகப் பெருமான கமக்கு. அறிமுகப்படுத்திய நக்கீரர், கம்முடைய கவலே எல்லாம் போக்கி நமக்கு அரணுக கின்று, கம்மிடத்தில் பெரிய நோயாக இருக்கும் அறியாமையைப் போக்குவதற்குரிய