பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

• 60 திருமுருகாற்றுப்படை விளக்கம் புகல் இடமாகிய திருவடித் தாமரையை, இதோ பார் அப்பா என்று காட்டுகிருர். உறுநர்த் தாங்கிய மதன் உடை கோன் தாள். மனிதர்கள் இன்பத்தை விரும்புவார்கள்; துன்பத்தை வெறுப்பார்கள். இன்ப ஆக்கமும், துன்ப நீக்கமும் மனிதர்கள் விரும்புவன. ஆண்டவன் தன்பால் வந்தவர் களுக்கு இன்பத்தைத் தந்து பாதுகாக்கிருன். அவர்களுக் குக் கவலை இல்லாமல் தாங்குகிருன் கண்ணன் கீதையில், "எல்லாப் பற்றையும் விட்டு என் திருவடியைப் பற்றிக் கொள்கி றதை மட்டும் செய்; நான் உன்னேத் தாங்கு கிறேன்' என்று சொன்னன். அதுபோல் ஆண்டவன் தன்னுடைய திருவடியைப் பற்றிக்கொண்டவர்களுடைய கவலைகளைப் போக்கி, அவர்களுடைய பொறுப்பை எல்லாம் ஏற்றுக்கொண்டு கலம் செய்கிருன், ஆதலின் அவனுடைய தாள் உறுநர்த் தாங்கும் தன்மையுடையது. திருக்கரம் அடுத்தபடியாக முருகப்பெருமானுடைய கையைப் பற்றிச் சொல்ல வருகிருர் நக்கீரர். அது துன்பத்தை நீக்குகிறதாம். தன்பால் வந்து செறுபவர்களே அடியோடு இல்லையாக்கி இடி போல முழங்குகின்ற கை அது. செறுகர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை. ஆண்டவனுக்குப் பகையும் இல்லை. நட்பும் இல்லை. ஆலுைம் அவனுடன் வந்து போர் செய்பவர்களே அவனுடைய கைகள் தேய்த்துவிடுகின்றன. செல் என்பது இடிக்குப் பெயர். பகைவர்களே அடியோடு