பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாணுதல் கணவன் - - 61. அழிக்கும் பராக்கிரமத்தை உடையன அவன் கைகள் அருளும், பாராக்கிரமும் அவனுடைய அறக் கருணைக்கும், மறக் கருணைக்கும் அடையாளங்கள். இறைவன் அடியார் களுக்கு அருள் செய்தும், அல்லாதார்களுக்கு மருள் செய்தும் இரண்டு பேருக்கும் வழிகாட்டுகிருன். இந்த இரண்டும் அவன் கருணேச் செயல்களே. காலால் அறக்கருணை செய்து, கையால் மறக்கருணை செய்கிருன், உறுநர்களேத் தாங்குகிறவன், செறுகர்களைத் தேய்க்கிருன். உறுகரைத் தாங்கிய கோன்ருளேயும், செறுகரைத் தேய்த்த தடக்கையையும் உடைய முருகப்பெருமானே நக்கீரர் நமக்கு அறிமுகப் படுத்துகிருர். தாள் தாங்குதல் _இங்கே, தாள் தாங்குகிறது என்றும், தடக்கை. தேய்க்கிறது என்றும் சொன்னர். நமக்கோ நம் கைகள் பொருளைத் தாங்கும். கால்தான் தேய்க்கும். இங்கே கால் தாங்குவது என்று சொன்னது எப்படிப் பொருந்தும்? இதனை ஆராயவேண்டும். பெரிய கொட்டகை போட்டிருக் கிருர்கள். அந்தக் கொட்டகையில் பல கால்களே கட்டு மேலே கூரை வேய்ந்திருக்கிருர்கள். ஓரிடத்தில் இரண்டு கால்களுக்கு மேலே விட்டம் போட்டு ஒர் ஊஞ்சல் போட்டிருக்கிருர்கள். அந்த ஊஞ்சலில் கான்கைந்து பேர் உட்கார்ந்து ஆடுகின்ருர்கள். ஊஞ்சல் பாரத்தைத் தாங்குகிறது. உண்மையைச் சொல்லப் போனல் ஊஞ்சல் தாங்குகிறதில்லை. அந்தப் பாரத்தைச் சங்கிலியின் வழியாக விட்டம் தாங்குகிறதென்று சொல்லலாம். நன்கு ஆராய்க் தால் அந்த விட்டமும் தாங்குவதில்லை. விட்டத்தைத் தாங்குகிற கால்களே எல்லாப் பாரத்தையும் தாங்கு