பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாணுதல் கணவன் - 63 தேய்க்கும் தன்மையுடையன. அந்தத் தடக்கைகள் என்று சொன்னர். எந்தத் திசையில் பகை இருந்தாலும் அங்கே .கீண்டு அதனைத் தேய்த்து இல்லையாக்கும் கைகள் அவை. ஆண்டவனுடைய திருவடி கருணே பில்குவது. அவன் திருப்புயம் வீரம் மலிந்தது. கருணேயும் ஆண்மையும் ஒருங்கே பொருந்தியவன் முருகன். அவன் திருவடியைப் பற்றிக் கொண்டவர்களுக்கு அவனுடைய கருணை பயன் படும். அவனே கேருக்கு நேர் கின்று எதிர்ப்பவர்களுக்கு அவன் கைகள் ஆண்மையைக் காட்டி அகங்தையை அழிக்கும். உறுகர்த் தாங்கிய மதன்உடை கோன்தாள் செறுகர்த் தேய்த்த செல்உறழ் தடக்கை. முருகப் பெருமானுடைய ஒளிப் பிழம்பாகிய திருவுரு வத்தை முதலில் காட்டி, பின்பு உருவத்தில் முதலில் தரிசனம் செய்வதற்குரிய திருவடியைக் காட்டி, அப்பால் திருக்கரத்தைக் காட்டினர் நக்கீரர். - தேவயானை அடுத்தபடி அந்தப் பெருமானுடைய அருகில் விற்றிருக்கும் தேவயானையைக் காட்ட வருகிருர். ஆறுபடை விடுகள் இன்னவை என்று சொல்லப் புகுந்த நக்கீரர் முதலில் தோற்றுவாய் செய்யும்போது திருப்பரங்குன்ற மாகிய முதல் படை வீட்டைச் சொல்கிருர். கிருப்பரங் குன்றம் தேவயான திருமணம் கடந்த இடம். ஆதலின் இங்கே ஆண்டவனுடைய தேவிமார் இருவருள் தேவயானையை மாத்திரம் சொல்ல வருகிரு.ர். மாறுவில் கற்பின் வாள் நுதல் கணவன் என்று அடையாளம் காட்டுகிருர், எம்பெருமானுடைய அருகில் வீற்றிருக்கும் தேவயானே தன்னுடைய உள்ளக்