பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 திருமுருகாற்றுப்படை ಗೀTäå களிப்பை யாவரும் அறியும்படியாக ஒளிபொருந்திய கெற்றியோடு விளங்குகிருள். உள்ளத்தில் துன்பம் இருக் தால் முகம் வாட்ட முற்றுத் தோன்றும். உள்ளத்தில் பூரிப்பும், இன்பமும் இருந்தால் முகம் ஒளி பெற்றுத் தோன்றும். இங்கே தேவயானேயினுடைய நெற்றி அல்லது முகம் ஒளி பொருந்தியதாக சிலவுகிறது. ஆகவே. வாள் நுதல் என்று சொன்னர். பாட்டில் தேவயான என்று குறிப் பதற்குத் தனியே அடையாளம் இல்லா விட்டாலும், மறுஇல் கற்பின் வாள் நுதல் என்ற குறிப்பும், முதலில் பரங்குன்றத்தைச் சொல்வதும் தேவயானையை அடையாளம் கண்டுகொள்ளச் செய்" கின்றன. குற்றமற்ற, கற்புடைய தேவயானையின் கணவன் என்று பொருள். கற்பு என்பது இங்கே மணத்தைக் குறிப்பது. களவு மணம், கற்பு பணம் என்று இரண்டுவகை உண்டு, களவின் வழிவந்த மணம் தமிழில் மிகச் சிறப்பாகச் சொல்லப்படும். முருகப்பெருமான் தமிழ் இலக்கணத்திற்கு அமைய வள்ளியம் பெருமாட்டியைக் களவு மண வழிப்படி மணந்து கொண்டிருக்கிருன். களவின் வழியே வள்ளியம் பெருமாட்டியை மணம்புரிந்து கொண்டவன் கற்பு மணத்தைத் தேவயானையின்பால் சிகழ்த்தினன். அவள் குற்ற மற்றவள்; கற்புடையவள். மறுவில் என்பது கற்பைச் சிறப்பிக்க வந்தது அன்று. மறுவில்லாத வாள்துதல், கற்புடைய வாள் துதல் என்று தனித்தனியே கூட்டவேண்டும். வாள் துதல்-ஒளி' பொருந்திய நெற்றியை உடையவள்; அன்மொழித்தொகை.