பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாணுதல் கணவன் 65 உலகத்தாருடைய தொடர்பு இல்லாமல் வானுலகத்தில் வளர்ந்தவள் தேவயானே. இந்திரன் முதலியவர்கள் தங்களுக்கு முருகன் செய்த பேருபகாரத்தை எண்ணித் தங்கள் நன்றி அறிவின் அடையாளமாகத் திருமணம் செய்து கொண்டருளவேண்டுமென்று சொல்ல, அதனல் ஆண்டவன் தேவயானையை ஏற்றுக்கொண்டான். அவள் எல்லாவகையிலும் தூய்மை உடையவள்; மாசு மறு அற்றவள், வள்ளியை அடுப்பாரும் கொடுப்பாரும் இல்லாமல் களவு மணத்தில் முருகன் ஏற்றுக்கொண்டான். யாரும் காண அடுப்பாரும் கொடுப்பாரும் இருக்கத் தேவயானயை ஏற்றுக் கொண்டான். ஆதலின் அப்பெரு மாட்டி கற்புமணப் பெருமாட்டியானள். இந்தக் கற்பு மணத்தை வினேந்து, கற்பின் வாள் நுதல் என்று சொன்னர், மறு இல்லாத வாள் நுதல், கற்பின் வாள் நுதல் ஆகிய தேவயானையின் கணவனுக விளங்கு கிறவன் முருகன். தேவயான முருகப் பெருமானுடைய அருகில் அமர்ந்திருக்கிருள். இரண்டு பேரையும் ஒருசேர வைத்து மக்குக் காட்டுகிறர் நக்கீரர். முதலில் ஒளிப் பிழம்பைக் காட்டி, பிறகு திருவடியைக் காட்டி, திருக் கரத்தைக் காட்டி, அந்தக் கரத்தினல் பற்றிக்கொண்டு மணம் செய்துகொண்ட தேவயானையைக் காட்டி, அந்தப் பெருமாட்டியின் கணவன் முருகன் என்று சொல்கிரு.ர். இனி அடுத்தபடியாக அவன் திருமார்பில் அணிந்துள்ள கடம்ப மாலேயையும் காந்தட் கண்ணியையும் சொல்ல வருகிருர், 5-قه |