பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாலையும் கண்ணியும் - - 67 கரேல் என்று படர்ந்த மேகத்தில் மின்னல் வீசுகிறது: ஆகாயத்தையே வாளில்ை கிழிப்பதுபோல இருக்கிறது அந்த மின்னல். இடித்து மின்னி மழையைப் பொழி கிறது மேகம்; எடுத்த எடுப்பில் பெரிய பெரிய துளிகளாகச் சிதறுகிறது. இப்போது பெய்கிற மழை முதல் மழை. அந்தப் பெரிய மழை பெய்ததனல் காட்டிலுள்ள மரங்கள் எல்லாம் கன்ருக வளர்கின்றன. மலர் மரங்கள் கிரம்பிய காடு ஆதலின் அது கறுங்காணமாக, மணம் வீசும் காடாக விளங்குகிறது. இப்போது மழை பெய்தமையில்ை தண்மையாக இருக்கிறது. முதல் மழை பெய்த அந்தக் காட்டிலே பெரிய கடம்ப மரம் செறிந்து வளர்ந்து அடர்ந்து படர்ந்து விற்கின்றது. தழையின் செறிவு எங்கும் இருளைப் பரப்பியிருக்கிறது. கதிரவனுடைய கதிர்கள் உள்ளே புகமாட்டாமல் அவ்வளவு அடர்த்தியாக இருக்கிறது. எங்கும் இருள் உண்டாகும்படியாகக் கிளேயும், கொம்பும், தழையும் படர்ந்திருக்கின்றன. பல காலமாக வளர்ந்த கடம்ப மரம் ஆதலின் அது மிகப் பருத்த அடியை உடைய தாக இருக்கிறது; அந்த அடியைக் கண்டு அதனுடைய பிராயத்தை வரையறுத்து விடலாம். பருத்த அரையை யுடைய கடம்ப மரம் அது பராஅரை மராஅம். அது தண்ணறும் கானத்தில் வளர்ந்து நிற்கின்றது. தலைப்பெயல் பெய்தமையில்ை அந்த மரம் தழைத்துப் பூத்து அழகுபெற சிற்கின்றது. கடம்ப மலர் உருளை வடிவில் இருக்கும்; வட்டமாக இருக்கும்; மாலை மாலையாகப் பூத்து இருக்கும் அந்த மலரைக் கட்டி அணிந்திருக்கிருன் முருகன். அது அவனுடைய மார்பிலே புரளுகிறது.