பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 திருமுருகாற்றுப்படை விளக்கம் கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை வாள்போழ் விசும்பில் வள்உறை சிதறித் தலைப்பெயல் தலைஇய தண்ாறுங் கானத்து இருள்படப் பொதுளிய பராஅரை மராஅத்து உருள்பூந் தண்டார் புரளும் மார்பினன். (கடலை முகந்த நிறைந்த கருப்பத்தை உடைய கரிய, மேகம் மின் ஒளி வெட்டும் வானத்தில் வளப்பமான மழைத் துளியைச் சிதறி முதல் மழையைப் பெய்த தண்ணிய, மணம் வீசும் காட்டில், இருள் உண்டாகும்படியாகச் செறிந்து படர்ந்த பருத்த அடிமரத்தையுடைய செங்கடம் பினது உருளும் பூவில்ை கட்டிய மாலே புரளும் திருமார்பை உடையவன். கார்கோள். கடல். கம-கிறைவு. வாள்-ஒளி. உறை.துளி. பெயல்-மழை. தலைஇய-பெய்த, பொதுளிய-செழித்த, பராஅரை-பரு அரை: பருத்த அடிமரம். மராஅம். செங்கடம்பு.) காந்தளங் கண்ணி கடலில் தோன்றும் ஞாயிற்றைப் போன்று நெடுங் தூரம் விளங்கும் பேரொளியையும், தன்னே அணுகு வாரைப் பாதுகாக்கும் வலிய தாளேயும், பகைவரை அழிக்கும் விசாலமான கைகளேயுமுடைய, தேவயானே கணவன், உருளுகின்ற பூவாகிய கடம்ப மலர் மாலையை அணிந்த மார்பை உடையவன்' என்று முருகனுடைய அடையாளங்களைச் சொன்னர் நக்கீரர். மார்பிலுள்ள மாலையைச் சொன்ன பிறகு அவனுடைய திருமுடியில் உள்ள காந்தளங் கண்ணியைப் பற்றிச் சொல்ல வருகிருர். முருகன் காந்தட் கண்ணி அணிந்தவன் என்று மட்டும் சொன்னல் அடையாளம் காட்டின அள வோடு கிற்கும். கார்தளங் கண்ணியின் பெருமையைச்