பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாலையும் கண்ணியும் - 69 சொல்லும் வாயிலாக அது வளருகிற காட்டின் எழில் ஒவியத்தைக் காட்டுகிருர் நக்கீரர். தேவமகளிரின் ஆசை முருகப்பெருமானுடைய அடையாள மாலே காந்தள். அது வளரும் காடு எத்தகையது தெரியுமா? தேவலோக மகளிர் தம்மை மலர்களால் அலங்களித்துக்கொள்ள விரும்புகிருர்கள். தேவலோகத்திலுள்ள கற்பக மரத்தில் பொன்னிற மலர்கள் இருக்கின்றன; ஆனல் பன்னிற மலர்கள் இல்லே. முருகப்பெருமானது ஆட்சிக்குரிய குறிஞ்சி கிலத்தில் மலையின்மேல் பல பல வடிவமும் வண்ணமுமுடைய மலர்கள் இருக்கின்றன. தேவலோகத் தில் காணவொண்ணுத அத்தகைய மலர்களே அணிந்து lf G5 பார்த்துக் கொள்ளவேண்டு மென்ற ஆசைلائے۔ அமரலோகத்து அணங்கினர்களுக்கு உண்டாகிறது. தங்களால் வணங்கப்பெறும் முருகப்பெருமானுடைய அருள் ஆட்சியில் வளம் பெறுகின்ற குறிஞ்சி நிலமாதலின் அவர்கள் உரிமையோடு வானிலிருந்து இறங்கி வருகிருர்கள். இயல்பாகவே அவர்கள் ஒளியும், எழிலுமுடைய திருமேனியைப் படைத்தவர்கள். ஆடையும் அணியும் தேவலோகத்தில் பெற்று அணிந்து கொண்டிருப்பவர்கள், அங்கே கிடையாத மலர லங்காரத்தை இங்கே செய்து கொள்ள வருகிருர்கள். அவர்கள் தம்மை மலர்களால் அலங் கரித்துக் கொண்டு மிக்க களிப்புடன் முருகப் பெருமானே வாழ்த்தி, மலையிலுள்ள சோலேயில் ஆடுகிருர்கள். அத்தகைய சோலையில் விளேகிறது காந்தள் என்று விரிவாகச் சொல்ல வருகிருர் எக்கீரர். அணங்கினர் அழகு குரர மகளிர் என்பது தேவப் பெண்களுக்கு ஒரு பெயர். அவர்களைக் கண்டால் அவர்களுடைய அழகே