பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 திருமுருகாற்றுப்பட்ை விளக்கம் அச்சத்தை உண்டாக்கும்; சூர் என்பது அச்சத்திற்கு ஒரு பெயர். அவர்கள் வந்து தங்களே அலங்கரித்துக் கொள்ளும் இடம் பெரிய மலை. அந்த மலைகளில் மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்திருக்கின்றன. மால்வரை கிவந்த சேண் உயர் வெற்பில். (பெரிய மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்த மிக உயர மாகிய மலையில்.) அங்கே வருகின்ற அணங்கினருடைய அழகு, எத்தகையது? அவர்கள் வரும்போது கிண்கினென்று அவர்கள் காலிலுள்ள கிண்கிணி ஒலிக்கிறது. அந்தப் பாதம் அழகாக, சிறியதாக, விளக்கம் தருவதாக இருக் கிறது. கிண்கிணி கவைஇய ஒண் செஞ் சீறடி. (கிண்கிணியால் சுற்றப்பெற்ற ஒளிபொருந்திய சிவந்த, சிறு அடி) - அவர்களுடைய கால் திரட்சி பொருந்தியதாக இருக் கிறது. கல்ல வளம் பொருந்திய திருமேனி உடையவர்கள் ஆதலின் அவர்களுடைய உறுப்புக்கள் கல்ல வளர்ச்சி பெற்று விளங்குகின்றன. திரட்சியான காலும், உள் வாங்கிச் சிறுத்திருக்கும் இடையும், பருத்த தோள்களும் உடையவர்களாக அவர் விளங்குகிருர்கள். கணக்கால் வாங்கிய நுசுப்பின் பணத்தோள். (திரண்ட காலேயும், உள்வாங்கிய இடையையும் பருத்த தோளேயும்-உடையவர்கள் என்று சொல்ல வருகிருர், கணே-திரட்சி.) அவர்கள் தம்முடைய இடையில் அழகிய பூந்துகிலே அணிந்திருக்கிருர்கள். அது செக்கச்செவேல் என்று